Sunday 10 April 2016

அத்தியாயம் - 3


. காவியம் எழுத பாபா சம்மதம் அளித்தது
                                                    


ஒம் ஸ்ரீ விநாயகனே போற்றி! ஸ்ரீ ஸரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹராஜனே போற்றி!குலதேவதைக்கும் ஸ்ரீ ஸீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீஸாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகின்றேன்.
காதையை விட்ட இடத்தில் தொடர்வோம். ''என்னுடைய சரித்திரத்தை எழுதுவதற்கு உமக்கு ஸம்பூர்ணமான அனுமதி உண்டு" என்று சொல்­, ஸாயீ எனக்கு முழுமையான உறுதிமொழி ஈந்தார்.
 ''உம்முடைய காரியத்தை நீர் சிறப்பாகச் செய்வீராக; மனத்தில் அணுவளவு தயக்கமும் வேண்டா; என்னுடைய வார்த்தைகளில் முழுவிசுவாசம் வைத்து, மனத்தை திடப்படுத்திக்கொள்வீராக. --
 ''என்னுடைய லீலைகள் எழுதப்பட்டால், அவித்யையால் (அஞ்ஞானத்தால்) ஏற்பட்ட தோஷங்கள் உடைந்துவிடும். பக்தி பாவனையுடன் கேட்கப்பட்டால், வாழ்க்கையின் சிறுதொல்லைகளும் பிரச்சினைகளும் மறந்துபோகும்.--
''கேள்விக்கட­ல் பக்தியும் பிரேமையும் அலைகளாக ஆர்ப்பரிக்கும். மீண்டும் மீண்டும் கேள்விக்கட­ல் முத்துக் குளித்தால், ஞான ரத்தினங்களை உங்களுடைய கரங்களில் கொண்டுவந்து சேர்க்கும்"
 இதைக் கேட்டவுடன் என் சந்தேகங்கள் அனைத்தும் பறந்தோடிவிட்டன. ஸாயீயின் பாதங்களில் விழுந்து பணிந்து, மனத்துதித்தவாறு அவருடைய சரித்திரத்தை எழுத ஆரம்பித்தேன்.
இச் சொற்கள் பாபாவின் உதடுகளி­ருந்து வெளிவந்தவுடன், பாபாவின் சரித்திரம் நிச்சயமாக எழுதப்படப் போகிறது என்னும் நிகழ்வுக்கு நற்சகுனமாக அதை என் மனத்தில் இருத்திக்கொண்டேன். நான் ஒரு சேவகன் மட்டுமே.
 ஹரியினுடைய லீலை எம்மாத்திரமும் புரிந்துகொள்ளமுடியாதது என்பதைப் பாருங்கள்õ அவரால்தான் அதைப்புரிந்துகொள்ள முடியும்; வேறெவராலும் முடியவே முடியாது! வேதங்களும் உபநிஷதங்களும் சாஸ்திரங்களும் மற்றவையும் ஆழங்காணமுடியாத நிலையில் ஊமைகளாயின.
இனிவரும் ஒவ்வொரு பதிவுகளிலும் சாயீ பக்தர்கள் பெற்ற அனுபவங்கள்  பின்வருமாறு ஆங்கிலத்தில் ஒரு குறிப்பாக வெளிவரும். 
----------------------------------------------------------------------------------------------------------------------------------
My Belief, My Confidence-Sai Baba
Anonymous Devotee from India says: I am a student Pursuing Masters in USA. I am a sincere devotee of Shirdi Baba since 2012. I am pursuing Masters in United States of America since 2013. I love Him so much and I always seek Baba before taking any decision. I never do anything against His words. I write to Him every day. Sometimes out of curiosity, I also predict my future (e.g. exam results). I would like to share one instance in this page. I was planning to visit India for my summer vacation. I was not sure if I had to, because I have to seek permission from my advisor and school authorities. Out of curiosity, I wrote a lot, with one saying, “will go” and another one saying, “Will go with some problem” and I got “will go with some problem”. I was so worried, but with some hope on Baba, I booked my flight after seeking permission from my advisor. 

After one month, I came to know that I have to do my thesis with another advisor and I was so upset since I wasn’t sure if she’ll give me permission to visit India for two months and also my roommate told me to find another apartment as her parents will be staying with her and to find an apartment I have to come back soon. I was so worried so I wrote a lot again to know, if I had to reschedule and I was told that,” I will reschedule my ticket”. I was really depressed but I was very confident that Baba will never let me down. With so much hope I started reading Chapter 15 from Sai Satcharitra every day for three months. Finally Baba also made me face another tough situation before I depart to India. I had to board my flight in Chicago on May 14th and on 13th there was a fire in Chicago airport and many flights was cancelled. But this time I didn’t worry but was so confident that Baba will take care. I continued to pray Baba. Baba showered all His blessings on me and answered my prayers. I reached India without any problem and delays. I also visited Shirdi and thanked Baba for all His blessings. I only thought that Baba is used this situation to test my belief in Him. I have had so many instances where Baba has helped me. I am departing to USA today and I hope that Baba will continue to bless me. Om Sri Sai Ram!! 

சாஸ்திர விற்பன்னர்களையும் வேதத்தின் பொருள் அறியாது சொல்­லேயே மூழ்கியவர்களையும் இலக்கண விதிகளில் ஆர்ப்பரித்து யானையையும் பானையையும் உதாரணங்களாக எடுத்துத் தாம் சொல்வதே சரி என்று விதண்டாவாதம் செய்யும் கூர்த்த மதிபடைத்த பண்டிதர்களையும் பார்த்துப் பிரமித்துப்போகாதீர்கள்.

ஸ்ரீஹரி நிஜமான பக்தர்களுடன் விளையாடுகிறான்; அவர்களுடைய தாளத்திற்கு ஆடுகிறான்! பிரேமைக்கு அடிமையாகி கள்ளங்கபடமற்ற எளிமையான பக்தனைத் தேடி அலைகிறான். பாஷாண்டிகளுக்கு (வெளிவேஷம் போடுபவர்களுக்கு) அவன் என்றுமே அகப்படுவதில்லை.

''உன்னுடைய நல்வாழ்வு இதில்தான் இருக்கிறது; எனக்கும் அவதார நோக்கம் நிறைவேறுகிறது. பார்! இதைத்தான் நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன்; இதுவே, என்னுடைய இடைவிடாத மனக்கிலேசமாகவும் இருந்து வருகிறது.--
 ''சாமா!நான் ஒன்று சொல்லுகின்றேன், கேள்!யார் என்னுடைய நாமத்தை அன்புடனும் நம்பிக்கையுடனும் ஜபிக்கிறானோ, அவனுக்கு நான், விரும்பியதையெல்லாம் அளிக்கிறேன். இதன் விளைவாக, அவனுக்கு என்மேல் உண்டான பக்தி பெருகுகிறது.--

 ''என்னுடைய புகழைப் பாடுபவனும், சரித்திரத்தைச் சுவையாக விவரித்துச் சொல்பவனும், அவர்களுக்கு முன்னும் பின்னும் மற்றும் அவர்களைச் சுற்றிய எல்லா இடங்களிலும் எப்பொழுதும் என்னையே காண்கின்றனர்.--

''ஆத்மார்த்தமாகவும் இதயபூர்வமாகவும் என்னிடம் அன்பு கொண்டவன் இக் கதைகளைக் கேட்டு இயல்பாகவே சந்தோஷமடைவான்.--

''என்னுடைய கீர்த்தனங்களைப் பாடுபவனுக்கு பூரணமான பரமானந்தத்தையும் சாந்தியையும் திருப்தியையும் நான் அருள் செய்வேன். இது ஸத்தியமான வார்த்தை.-

 ''வேறெதிலும் பற்றில்லாமல் என்னையே சரணடைந்து, முழு விசுவாசத்துடன் என் புகழைப் பாடி, என்னைப்பற்றியே நினைத்துக்கொண்டும் சிந்தித்துக்கொண்டும் இருப்பவனை நான் கடைத்தேற்றுகிறேன் என்பது என் ஸத்தியப் பிரமாணம்.--

 ''எங்கு என் நாமமும் பக்தியும் லீலைகள்பற்றிய ஏடுகளும் புராணமும் இதயத்தில் குறையாத சிந்தனையும் இருக்கின்றனவோ, அங்கு எப்படிப் புலனின்ப நாட்டம் தலைகாட்ட முடியும்?--

 ''என்னுடைய கதைகளை மாத்திரம் கேட்டால்கூடப் போதும், வியாதிகள் நிவாரணம் செய்யப்படும்; என்னுடைய நிஜமான பக்தனை நான் மரணத்தின் பிடியி­ருந்தும் விடுவிப்பேன்.--

 ''பக்தியுடன் இக் கதைகளைச் செவிமடுங்கள்; கேட்ட பிறகு அவற்றை ஆழமாக மனத்துள் பிரதிப­யுங்கள்; பிரதிப­த்தபின் தியானம் செய்யுங்கள்; உன்னதமான திருப்தியைப் பெறுவீர்கள்.--

''நான் எனும் பிரக்ஞை மறைந்து, 'நானே அவன் (இறைவன்' என்னும் உணர்வு உதயமாகும். வேறெதிலும் பற்றில்லாத பரிபூரணமான சிரத்தையால், சித்தம் தெய்வீக சக்திகளால் நிறைந்து கனக்கும்.--

 ''ஸாயீ ஸாயீ என்ற நாமஸ்மரணம் க­யுகத்தின் மலங்களை எரிக்கும். பேச்சினாலும் கேள்வியினாலும் விளைந்த பாவங்கள் என் முன்பாகச் செய்யப்படும் ஒரே

 இவ்வேலை (சரித்திரம் எழுதுவது) அவ்வளவு சாமானியமில்லை என்றாலும், மரியாதையுடனும் பக்தியுடனும் நான் அவருடைய ஆணையை சிரமேற்கொண்டேன். பாபாவைப் போன்ற ஒரு தர்மதாதா (கொடைவள்ளல்) இருக்கும்போது, நான் ஏன் ஒரு தாழ்மையான நிலையை ஏற்றுக்கொள்ள வேண்டும்?

 அவர் சில பக்தர்களைக் கோயில்கள் கட்டவைத்தார்; வேறு சிலரை நாமஸங்கீர்த்தனம் (பஜனை) செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொள்ளச்செய்தார்; சிலரைத் தீர்த்தயாத்திரை செல்லவைத்தார்; என்னை எழுதவைத்தார்!

 அவர்களின் நடுவே நான் பாமரன். கருணைக்கடலும் தயாஸாகரமுமான ஸாயீ, என்னிடம் என்ன நற்குணம் கண்டு என்மீது பிரியமடைந்தார் என்பது எனக்கு விளங்கவில்லை.

 ஆயினும், இதுவே குருவருள் செய்யும் அற்புதம். ஒரு துளி ஈரமும் இல்லாது உலர்ந்து காய்ந்துபோன மரமாயினும், ஏதும் செய்யாமலேயே பூத்துக் காய்த்துப் பழுத்துக் குலுங்குமன்றோ!

 வருங்காலத்தில் சிலர் ஆசிரமங்களை அமைப்பர்; சிலர் கோயில்கள் கட்டுவர்; சிலர் நதிக்கரைகளில் படித்துறைகளும் கட்டுவர். ஆனால் நாமோ, ஒற்றையடிப் பாதையிலேயே சென்று ஸாயீயின் சரித்திர பாடத்தைப் படிப்போம்.

சிலர் பயபக்தியுடன் பாபாவுக்குப் பூஜை செய்கிறார்கள்; சிலர் அவருடைய பாதங்களை இதமாகப் பிடித்துவிடுகிறார்கள்; என்னுடைய மனமோ பாபாவின் பெருமைகளைப் பாடவேண்டுமென்று ஆவல் கொண்டது.

 கிருதயுகம் அல்லது ஸத்திய யுகத்தில் தவத்தினால் அடையப்பட்டது, திரேதாயுகத்தில் யாகங்கள் செய்ததால் அடையப்பட்டது, துவாபர யுகத்தில் சடங்குகள் நிறைந்த பூஜைகள் செய்ததால் அடையப்பட்டது, கலி ­யுகத்தில் நாமஸங்கீர்த்தனம் செய்வதாலும் குருவைத் தொழுவதாலும் அடையப்படும்.!

 நான் எல்லாம் சிறிது சிறிது தெரிந்தவன்; எதையும் முழுமையாகத் தெரிந்து கொண்டவன் அல்லேன். இந்நிலைமையால், என்னுடைய தகுதியின்மை (சரித்திரம் எழுத) என்னமோ வெட்டவெளிச்சம்! அப்படியிருக்க, நான் ஏன் இந்தப் பிரம்மாண்டமானதும் கடினமானதுமான பணியை ஏற்றுக்கொண்டேன்?

 எம்முயற்சியும் செய்யாது சும்மா உட்கார்ந்திருப்பேனானால், ஆக்ஞையை பங்கப்படுத்திய குற்றத்திற்கு ஆளாவேன். ஆணையை நிறைவேற்றவேண்டுமென்று இறங்கலாமென்றால், என்னால் சரிவரச் செய்துமுடிக்கக்கூடிய காரியமாகத் தெரியவில்லையே!

கிருதயுகம் - முதல் யுகம் - ஸத்தியயுகம் - புண்ணிய யுகம் - 17,28,000 ஆண்டுகள்

திரேதாயுகம் - இரண்டாம் யுகம் - இராமாயணம் நடந்த யுகம் - 12,96,000 ஆண்டுகள்

துவாபரயுகம் - மூன்றாம் யுகம் - மஹாபாரதம் நடந்த யுகம் - 8,64,000 ஆண்டுகள்

கலி­யுகம் - நான்காம் யுகம் - கடைசியுகம் - தற்போது நடக்கும் யுகம் - 4,32,000 ஆண்டுகள்

 ஸமர்த்த ஸாயீயின் நிஜமான ஸ்திதியை (நிலைமையை) யார்தான் துல்­யமாகவும் முழுமையாகவும் விவரிக்க முடியும்? பக்தஜனங்களுக்காக அவரே அருள்செய்து, விவரிக்கும் சக்தியை யாருக்காவது அளித்தால்தான் இது முடியும்.

வார்த்தைகளுக்கு எட்டாத விஷயத்தை விவரிக்க நான் ஏன் முயல்கிறேன் என்று எவரும் யூகம் செய்ய நான் இடமேதும் கொடுக்க விரும்பவில்லை.

நான் பேனாவைக் கையிலெடுத்தவுடன் பாபா என்னுள் இருக்கும் 'நான்' எனும் கர்வத்தை அடக்கி, அவருடைய வாழ்க்கைச் சரித்திரத்தை அவரே எழுத ஆரம்பித்துவிட்டார். இவ்வாறாக, சரித்திரம் எழுதியதன் பெருமை அவருடையதே!

இதுவோ ஒரு முனிவரின் சரித்திரம்; அம் முனிவரேயன்றி வேறுயார் இதை எழுத முடியும்? புரிந்துகொள்ளமுடியாத பாபாவின் குணாதிசயங்களைப் புரிந்துகொள்ள முயல்வது, ஆகாயத்தை ஆலி­ங்கனம் செய்ய (அணைத்துக்கொள்ள)முயற்சி செய்வதற் கொப்பானது.

அவருடைய மஹிமையோ வானளாவியது; அதைப் பாடமுயலும் என்னுடைய மதியோ ஹீனமானது. ஆகவே, அவர் இந்த வேலையைத் தம் கைகளில் எடுத்துக்கொண்டு அவரளித்த உறுதிமொழியை நிறைவேற்றவேண்டும்.

 பாபா! யான் பிறப்பால் பிராமணன் ஆயினும், வேதங்கள் புராணங்கள் என்னும் இரு கண்களைப் பெற்றவனில்லை. என் மேற்குடிப்பிறப்பு இவ்வாறு கறைபடிந்ததாயினும், நீர் அதற்குப் பெருமை சேர்த்துவிட்டீர்.

 சுருதியும் (வேதமும்) ஸ்மிருதியும் (வாழ்க்கைக் கோட்பாட்டு நெறிகளும்) பிராமணனின் இரு கண்களாகும். இவற்றில் ஒன்று இல்லையெனில் அப் பிராமணன் ஒற்றைக் கண்ணன்; இரண்டுமே இல்லையெனில் அவன் குருடனாகிறான். நான் இரண்டாமவன்போல் ஹீனனும் தீனனும் ஆவேன்.

ஆனால், என்னுடைய குருட்டுக்குக் கோலாக நீர் அமையும்போது நான் ஏன் வருந்த வேண்டும்? கோ­ன் உதவியுடன் அடிமேல் அடியாக எடுத்துவைத்து ஒற்றையடிப் பாதையில் உம்மைப் பின்தொடர்ந்து வருவேன்.

இப்பொழுது மேற்கொண்டு எப்படி முன்னேறுவது என்று, பாமரனாகிய எனக்கு விளங்கவில்லை. உம்முடைய திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள தேவரீர் என் புத்திக்கு வழிகாட்ட வேண்டும்.

அவருடைய யுக்திகளை அவரே அறிவார். எண்ணத்தால் கற்பனை செய்யமுடியாத அவருடைய மாயாசக்தி, ஊமையையும் பிருஹஸ்பதியைப் (தேவகுருவைப்) போன்று பேசவைக்கிறது; முடவனையும் மேருமலையைத் தாண்டவைக்கிறது.

நான் உம்முடைய பாதங்களின் தாஸன்; என்னை உதாசீனம் செய்துவிடாதீர். என்னுட­ல் சுவாஸம் ஓடும்வரை உம்முடைய திட்டத்தை நிறைவேற்றிக்கொள்ளும்.

கதை கேட்கும் ஜனங்களே! இக்காவியத்தின் பிரயோஜனம் என்ன என்பதைப் புரிந்துகொண்டுவிட்டீர்கள். ஸாயீயே இக் காதையை எழுதச் செய்வார்; தவறு, தவறு, தம் பக்தகோடிகளின் மங்களத்திற்காக இக் காதையைத் தாமே எழுதுவார்.

 என்ன நாதம் எழுகிறதென்பதில் புல்லாங்குழலுக்கோ ஆர்மோனியத்திற்கோ சிரமம் என்ன இருக்கிறது? சிரமம் அனைத்தும் வாசிப்பவனுடையதுதானே? நான் எதற்காகக் கவலைப்படவேண்டும்?

 சந்திரகாந்தம்[சந்திரனுடைய கிரணம் பட்டவுடன் நீர் பொழியும் கல்] பொழியும் அமுதம் அதனுடையதா? இல்லவேயில்லை; அது, உதயமாகும் சந்திரன் விளைவிக்கும் அற்புதம்!

அதுபோலவே, ஆர்ப்பரிக்கும் பேரலைகள் ஸமுத்திரத்தின் வேலைப்பாடா என்ன? தானே அலைகளை உயரச்செய்ய ஸமுத்திரத்தால் ஆகாது; சந்திரோதயத்தைச் சார்ந்துதான் அது பொங்கமுடியும்.

 கட­ல் நிறுவப்பட்ட சிவப்பு விளக்கேந்திய மிதப்புகள் எப்படிக் கப்பல்களைப் பாறைகளையும் சுழல்களையும் தவிர்த்து, வேகமாக முன்னேறச் செய்கின்றனவோ, அப்படியே--

அமிருதத்தைவிடச் சுவையான ஸாயீநாதனின் காதைகள், கடக்க இயலாத சம்சார ஸாகரத்தைக் கடப்பதை ஆபத்தின்றி சுலபமாக்கிவிடுகின்றன.

 காதுவழியே இதயத்துள் புகுந்து, தேஹாபிமானத்தை (பௌதிக உட­ன்மேல் பற்றை) வெளியே தள்ளி, இரட்டைச் சுழல்கள்[இன்பம் / துன்பம் - வேண்டுதல் / வேண்டாமை - வெப்பம் / குளிர் - நன்மை / தீமை போன்றவை]  எனும் மாயையை இல்லாது செய்துவிடும் ஞானிகளின் கதைகள் புனிதமானவை.

 இக் காதைகள் ஒருவருடைய ஹிருதயத்தில் ஏற ஏற, மனத்திலுள்ள சந்தேகங்களும் கேள்விகளும் படிப்படியாக முடிச்சவிழும்; ஞானம் மலரும்; உட­லில் ஏறியிருந்த கர்வம் இறங்கிவிடும்.

 பாபாவின் தெய்வீகமான கீர்த்தியின் வர்ணனையைச் செவிமடுப்பது பக்தர்களின் மனமலங்களை எரிக்கும். ஆன்மீக முன்னேற்றத்திற்கு மிகச் சுலபமான பாதை இதுவே.

 மாயையைக் கடந்த சுத்த பிரம்மம் எது? மாயையை எவ்விதம் கடப்பது? ஹரிக்குப் பிரியமானவனாக ஆவது எப்படி? கர்மங்களையும் தர்மங்களையும் நன்கு பின்பற்றுவதாலா?

 மனிதன் கடைசியாக அடையக்கூடிய மிக உன்னதமான நிலை எது? பக்தி எது? முக்தி எது? விரக்தி எது? வர்ணாசிரம தர்மம் என்றால் என்ன? அத்வைதம் என்றால் என்ன? இத்தியாதி விஷயங்கள் மறைபொருளானவை.

இவ்விஷயங்களில் ஆர்வமுள்ளவர்கள் தங்கள் ஞானதாஹத்தைத் தணித்துக்கொள்ள, ஞானேச்வர், ஏகநாதர் போன்றோர் எழுதிய நூல்களை வாசிக்கவேண்டும்.

கிருதயுகத்தில் மனத்தையும் புலன்களையும் அடக்கித் தவம் செய்தல், திரேதாயுகத்தில் யாகம் செய்தல், துவாபர யுகத்தில் சடங்குகளோடு கூடிய பூஜை செய்தல், க­யுகத்தில் கதாகாலட்சேபமும் நாமஸங்கீர்த்தனமும் செய்தல் -- இவை முக்தியடைவதற்கு உண்டான சாதனங்களாம். இவற்றுள் க­யுக சாதனம் மிக சுலபமானது.

குருவின் கதைகளைக் கேட்பதென்னும் முக்தி மார்க்கம் நான்கு வர்ணத்தாருக்கும் உண்டு. பெண்களாக இருந்தாலும் பிற்படுத்தப்பட்டோராக இருப்பினும் ஜாதியே இல்லாதவராக இருப்பினும் இவர்களனைவருக்கும் மார்க்கம் இதுவே.

புண்ணியம் சேர்த்தவர்களே இக் காதைகளைக் கேட்பார்கள். சிலருக்குக் கேட்டுக் கொண்டிருக்கும்போதே தூக்கம் வந்துவிடும். அவர்களையும் ஸ்ரீஹரி எழுப்பிவிடுவார்!

முடிவேயில்லாத புலனின்பங்களை நாடி ஓடி, அடையமுடியாததால் மனமொடிந்து போனவர்களுக்குக்கூட, ஞானிகளின் கதாமிருதம் புலனின்ப வேட்கையி­ருந்து விடுதலை அளிக்கும்.

யோகமும் யாகமும் தியானமும் தாரணையும் நானாவிதமான பெருமுயற்சிகளால் அடையவேண்டியவை. ஒருமுகமான கவனம் ஒன்றைத்தவிர, இக் கதைகளைக் கேட்பதில் ஆயாஸம் ஏதுமில்லை.

இவ்விதமாக, ஸாயீயின் காதை நிர்மலமானது. பிரேமையுடன் இதை ஸத்ஜனங்கள் (நல்லோர்) செவிமடுக்கட்டும்; அவர்களுடைய பஞ்சமஹாபாபங்களும் வேரோடு எரித்து நாசமாக்கப்படும்.

 மனிதப்பிறவி என்னும் பந்தத்தில் நாம் இறுக்கமாகக் கட்டப்பட்டிருக்கிறோம். இந்தக் கட்டுகளுள் நம்முடைய நிஜரூபம் மறைந்துகொண் டிருக்கிறது. கதையைக் கேட்பது இக் கட்டுகளைத் தளர்த்தி ஆத்மதரிசனம் கிடைக்கச் செய்யும்.

 ஆகவே, இக் காதைகளை மரணபரியந்தம் நினைவில் வைப்போம்; தினமும் இவற்றைப் பரிசீ­ப்போம். உலக வாழ்வாலும் அதனுடைய துக்கங்களாலும் பொசுக்கப்படும் ஜீவன்களுக்கு சாந்தி கிடைக்கும்.

 பக்தியுடனும் விசுவாசத்துடனும் இக் காதைகளைப் படிப்பதாலும் கேட்பதாலும் ஸாயீ தியானம் ஸஹஜமாகவே (இயல்பாகவே) மலரும். ஸாயீயின் ரூபம் கண்முன்னே தோன்றி, பிறகு இதயத்தில் அமரும்.

இவ்வாறு ஸத்குருவின்மீது பக்தி செலுத்துவதால் உலகவாழ்க்கையில் பற்றற்ற மனப்பான்மை வளரட்டும். குருவைப்பற்றிய நினைவில் பிரீதியுண்டாகி, மனம் நிர்மலமாகட்டும்.

 இவ்வெண்ணம் கொண்டே, ஸாயீ என்னை ஆசீர்வதித்திருக்க வேண்டும். என்னைச் சாக்காக வைத்துக்கொண்டு, அவருடைய திட்டத்தை அவரே நிறைவேற்றிக்கொள்கிறார்.

பால் மிகுதியாகச் சுரந்து, மடி கனத்து வ­த்தாலும், கன்றில்லாமல் பசு பாலை வெளியே விடாது. இது பசுவினுடைய உடன்பிறந்த குணம்; ஸாயீயினுடைய அருளும் அவ்வாறே.

 சாதகப் பறவையான நான் இதற்கு ஆசைப்பட்டபோது, என்னுடைய அல்பதாகத்தை மட்டுமல்லாமல் மற்ற பக்தர்களின் தாகத்தையும் தீர்க்கும் வகையில் என் அன்னை என்மீது ஆனந்த மழையாகப் பொழிந்தார்.

என்னே ஒரு தாயின் பிரேமையும் பக்தியும்!ஒரு தாயால்தான் தன் குழந்தையின் பசியை உள்ளுணர்வால் அறிந்து, வாய் திறக்காதிருக்கும்போதே தன் முலைக்காம்பை அதன் வாயினுள் திணிக்க முடியும்.

ஆனால், அவளுடைய மெய்வருத்தத்தையும் சோர்வையும் யார் அறிவார்? குழந்தையோ ஏதும் அறியாதது. தாயைத் தவிர வேறு எவர், கேட்காமலேயே முலையமுதம் தருவார்?

 கொலுசு அணிவதில் குழந்தைக்கு என்ன ஸ்வாரஸ்யம் (சுவை)? குதூகலத்தைத் தாயன்றோ அடைவாள்! அவ்வகையே ஸத்குரு மாதாவின் செய்கைகளும்.

 தம்முடைய குழந்தையின் சின்னச்சின்ன ஆசைகளை யார் திருப்தி செய்யப்போகிறாரோ, என்று தாயைத் தவிர வேறு எவர் இளகிய மனத்துடனும் பரிவுடனும் ஏங்குவார்? தாய்ப்பாசம் அசாதாரணமானது!

ஸத்துவ குணங்களுடைய அன்னைக்குக் குழந்தையாகப் பிறப்பது என்பது பாக்கியசாலி ­களுக்கே அளிக்கப்படும் இறைவனின் வரம். குழந்தையை இவ்வுலகத்திற்குக் கொண்டுவர, தாய் பட்ட பிரஸவ வேதனையைக் குழந்தை அறியுமோ? [தொடரும்]

Thursday 7 April 2016

ஸத்குரு ஸாயீபாபா-அத்தியாயம் - 2[ ஈ ]

                                                              தாங்கள் ஜப்பானில் வசிக்கும் சாயி பக்தரா?
இந்த திவ்ய சரித்திரத்தை கணினி மூலமும்.மொபைல் மூலமும் வாட்ஸ் அப்பிலும் கிண்டிலிலும் வாசித்து வரும் தங்களுக்குப் பணிவான ஒரு வேண்டுகோள். உங்கள் நண்பர்களையும் இதைத்தொடர்ந்து   வாசிக்கச்செய்யுங்கள். உங்கள் வாசிப்பின் பலன் கூடுதலாகும் பாபாவின் ஆசி  தங்களுக்கு இரட்டை மடங்காகக்கிட்டும்.எவ்வாறெனில் தாங்கமுடியாத  துன்பச்சுமையை எவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பாத  மற்றொருவருக்கு வேறு எப்படி நாம் உதவ முடியும்?}
                                                                        

தேவகிரியைத் தலைநகராகக் கொண்ட யாதவ அரசர்களும் தௌலதாபாத்தைத் தலைநகராகக் கொண்ட ஜாதவ அரசர்களும் ஒரு வம்சத்தினரே. பதின்மூன்றாம் நூற்றாண்டில் இவர்களுடைய இராஜ்ஜியத்தின் செழிப்பு மஹாராஷ்டிரத்திற்குப் புகழ் சேர்த்தது.

இந்த வம்சத்தில் மஹாதேவர் எனப் பெயர் கொண்டவர் பராக்கிரமும் பிரக்கியாதியும் படைத்த சக்கரவர்த்தியாக விளங்கினார்.

இவருக்குப் பிறகு ராமராஜா எனப் பெயர்கொண்ட அரசர் யதுவம்சத்தின் மிகச்சிறந்த ரத்தினமாக விளங்கினார். பல நற்குணங்கள் வாய்ந்தவரும் எல்லா யோக்கியதைகளும் பெற்றவருமான ஹேமாத்ரி என்பவர் இவர்கள் இருவருக்குமே மந்திரியாகப் பதவி வகித்தார்.

 ஹேமாத்ரி பிராமணர்களுக்குப் போஜனம் செய்விப்பதைப் பெரிதும் விரும்பினார். சுருதிகளையும் (வேதங்கள்) ஸ்மிருதிகளையும் (ஒழுக்க விதி நூல்கள்) நன்கு ஆராய்ந்து, வாழும் விதிமுறைகளைத் தொகுத்து, 'தர்ம சாஸ்திரம்ஃ என்னும் நூலை மராட்டியில் முதன்முதலாக எழுதியவர் இவரே.

 இவர் 'சதுர்வர்க்க சிந்தாமணி' என்னும் நூலையும் எழுதினார்.(1. விரதங்களும் அனுஷ்டானமும் 2. தானதருமங்கள் 3. புனித யாத்திரைகள் 4. மோக்ஷமார்க்கம் என்று இந்நூலை நான்கு அத்தியாயங்களாகப் பிரித்து, எல்லா விவரங்களையும் அளித்திருக்கிறார். இந் நூல் மிகப் புகழ் பெற்றது. )
--------------------------------------------------------------------------------------
 The Self cannot be gained by the study of Vedas, nor by intellect,nor by much learning.He,whom the Self chooses, by him It is gained.To him the Self reveals Its nature-Shirdi Sai Baba.
--------------------------------------------------------------------------------------
 ஸம்ஸ்கிருத பாஷையின் ஹேமாத்ரி பந்த் என்னும் சொல் மராட்டியில் ஹேமாட் பந்த் எனத் திரிந்தது. ஹேமாத்ரி அக்காலத்தின் தலைசிறந்த ராஜதந்திரியாகவும் சாணக்கியராகவும் திகழ்ந்தார்.

 அவர் ஸ்ரீவத்ஸ கோத்திரத்தில் பிறந்தவர்; நான் பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவன். அவருக்கு முன்னோர்களில் ஐவர் மஹரிஷிகள்; எனக்கு முன்னோர்களில் மூவர் மஹரிஷிகள். அவர் யஜுர் வேதம் ஓதியவர்; நான் இருக்குவேதி. அவர் சிறந்த அறிவாளி; நானோ ஒரு மூடன்.

 அவர் யஜுர் வேதத்தின் 'மாத்யாந்தின' கிளையைச் சார்ந்தவர். நான் இருக்கு வேதத்தின் 'சாகலஃ கிளையைச் சேர்ந்தவன். அவர் தர்ம சாஸ்திரத்தில் சிறந்த ஞானம் பெற்றிருந்தார்; நானோ நாகரிகமற்ற அடங்காப்பிடாரி. அவர் கல்விகேள்வி மிக்க ஞானி; நானோ ஒரு தகுதியுமற்ற அறிவி­. இவ்வாறிருக்க, ஏன் எனக்கு இந்தத் தகுதியற்ற பட்டம்?

அவர் ஓர் அனுபவமிக்க அரசியல்வாதியும் கூர்ந்த மதி மிகுந்த ராஜதந்திரியும் ஆவார். நானோ மந்தபுத்தியும் சிறுமதியும் படைத்தவன். அவர் 'ராஜ்யப்ரசஸ்திஃ என்னும் ஸம்ஸ்கிருதக் காவியம் இயற்றிப் புகழ் பெற்றவர். நானோ ஸமஸ்கிருதத்தில் ஒரு செய்யுள்கூட எழுத இயலாதவன்.

அவர் ஓர் எழுத்துச் சித்தர்; நானோ படிப்பறிவில்லாதவன். அவர் தர்ம சாஸ்திரங்கள் நன்கு தெரிந்த அறிவாளி; என்னுடைய ஞானம் சொல்பமே.

 'லேகனகல்பதரு' என்பது அவர் இயற்றிய பல்சுவைக் கவிதைக் கொத்து; நானோ ஓர் ஓவியும் (மராட்டிச் செய்யுள்) எழுத இயலாத பாபாவின் மட்டிப்பிள்ளைõ

 சுமார் 8-ல் இருந்து 14ஆவது நூற்றாண்டு வரை மஹாராஷ்டிர தேசத்தில் கோராகும்பர், சோகாமஹர், ஸாவதாமா­, நிவிருத்தி நாதர், ஞானேச்வர் மஹராஜ், நாமதேவர் போன்ற ஞானிகள் தோன்றி பக்தி மார்க்கத்தை வளர்த்தனர்.

பண்டித போபதேவ் போன்ற வித்தியாரத்தினங்கள் அலங்கரித்த ராஜசபையில் ஹேமாட் பந்த் மந்திரியாக அமர்ந்து, அறிவாளிகள் மற்றும் திறமைசா­களின் நடுவே பெயரும் புகழும் பெற்றார்.

 இதன் பிறகு, முகலாயப்படை தக்காணத்தை வடதிசையி­ருந்து தாக்கி, எங்கும் பரவியது; அதுவே தக்காண அரசர்களின் முடிவாகியது.

 இந்தப் பட்டப்பெயர் சந்தேகமில்லாமல் என்னுடைய சாமர்த்தியத்திற்காகச் சூட்டப்பட்ட புகழாரம் எனினும், நோக்கமேதுமின்றி வழங்கப்பட்டதன்று. எதற்கெடுத்தாலும் வாதத்தில் இறங்கும் என்னுடைய இயல்பின்மேல் எய்யப்பட்ட, என் அஹங்காரத்தை அழிக்கத் தொடுக்கப்பட்ட சொல்லம்பாகும்.

 அறைகுறை ஞானத்தை வைத்துக்கொண்டு நான் போட்ட ராஜநடை எல்லாம் வெறும் பிதற்றலே. என்னுடைய ஞானஹீன நிலையை அறிந்துகொள்ளும் வகையில் இலேசான கண்டிப்பு என்னும் மையைத் தடவி, என் கண்களைத் திறந்துவிட்டார் பாபா.

 எது எப்படியிருப்பினும், மிக முக்கியமானதும் தக்க சமயத்தில் வெளிவந்ததும் ஸாயீயினுடைய திருவாயி­ருந்து மலர்ந்ததுமான இந்தப் பட்டப்பெயரை நான் ஒரு பூஷணமாக (அணிகலனாக) எடுத்துக்கொண்டேன்.

இருப்பினும், எதற்கெடுத்தாலும் வாதம் செய்வதென்னும் கெட்டபழக்கம் ஒருகணம்கூட என்னைத் தொடுவதை அனுமதிக்கக்கூடாது என்னும் பாடத்தை நான் கற்றுக்கொள்ள வேண்டுமென்பதை உணர்ந்தேன். ஏனெனில், இக்குணம் பல கெடுதல்களை விளைவிக்கக்கூடியது.

 என்னுடைய வாதத்திறமையைப்பற்றிய கர்வத்தை ஒழித்துவிடுவதற்காகவும், பணிவுடன் வாழவேண்டுமென்பதை இறுதிநாள்வரை மறந்துவிடக்கூடாது என்பதற்காகவுமே இப்பட்டம் எனக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.

தசரத புத்திரனும் மஹாவிஷ்ணுவின் அவதாரமானவரும் பூரணஞானியும் பிரபஞ்சத்தைக் காப்பவரும் ரிஷிகணங்களின் மனத்தில் நிலைபெற்றவருமான ஸ்ரீராமரே தம் குலகுரு வசிஷ்டரின் பாதங்களில் வணங்கினார்.

ஸ்ரீகிருஷ்ணர் பர பிரும்மத்தின் சுந்தரமான உருவமேயாவார். அவரும் ஸாந்தீபனி முனிவரை குருவாக ஏற்றுக்கொண்டு, பல சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. குருவின் ஆசிரமத்திற்கு விறகு சேகரித்துக் கொண்டுவந்து போட நேர்ந்தது.

அவர்களோடு ஒப்பிடும்போது நான் எம்மாத்திரம்? வாதப்பிரதிவாதங்களைச் செய்வதில் என்ன பயன்? குருவின்றி ஞானமும் இல்லை, மோக்ஷமும் இல்லை. சாஸ்திரங்களில் கூறப்பட்ட இக்கருத்து என் மனத்தில் திடமாகியது.

 எதற்கெடுத்தாலும் வாதம் செய்யும் இயல்போ மற்றவர்களுடன் போட்டிபோடுவதோ நற்குணம் அன்று. உள்ளார்ந்த நம்பிக்கையும் தைரியமும் பொறுமையும் இல்லையெனில், ஆன்மீக முன்னேற்றம் சிறிதும் ஏற்படாது.

பின்வந்த நாள்களில் நானே இவ்வுண்மையை அனுபவித்தேன். இவ்வாறாக, அன்புடனும் நல்லுணர்வுடனும் தூய இதயத்துடனும் அடக்கத்துடனும் யான் இந்த கௌரவமளிக்கும் பட்டப்பெயரை ஏற்றுக்கொண்டேன்.
                                                             

                               ஜப்பான் டோக்கியோவில் உள்ள சாயீ ஆலயம் 
                                      Contact:Kiyotaka Aiuchi & Kaco Aiuchi.
                                                     "Bongaren."
                                 Religious Organization Guru & "DivineSoul Inc."
                                             President & CEO.
                                        Mail: info@bonga.jp
                                                  Office Address: 
                    〒171-0014 Tokyo, Toshima-ku, Ikebukuro,
                                             Japan 2-68-10-302
                                             Temple Address:
                                           "BONGAREN TEMPLE"
                                           2-60-6 1F Ikebukuro,
                                                Toshima-ku,Tokyo 〒171-0014.Japan.
                                         Website: http://divinesoul.jp/

 'என் கட்சி - எதிர்க்கட்சி' என்னும் கருத்தையே சேதம் செய்வதும் வாதப்பிரதிவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுமானதும் எல்லாருக்கும் போதனையாக அமைவதுமான இக் காதையை இங்கு முடிப்போம்.

 இக்காவியத்தின் பிரயோஜனத்தையும் யாருக்காக எழுதப்பட்டது என்பதையும் காவியத்திற்கும் பொருளுக்கும் உண்டான சம்பந்தம் பற்றியும் ஹேமாட் என்று நான் பெயரிடப்பட்டதையும் விவரித்து எழுதிவிட்டேன்.

இந்த அத்தியாயத்தின் விஸ்தாரம் போதும்!சில நாள்கள் கழிந்தபின், மற்ற விவரமான காதைகளையும் வரிசைக்கிரமப்படி ஸாயீயின் பாதங்களில் ஹேமாட் ஸமர்ப்பிப்பேன். கதை கேட்பவர்களேõ !வனத்துடன் கேளுங்கள்.

ஸாயீயே நமது சுகமும் செல்வமும்; ஸாயீயே ஸச்சிதானந்தம்; ஸாயீயே நமக்கு உலகத்துன்பங்களி­ருந்து விடுதலையளிப்பவர்; கடைசியில் நாம் சென்றடைவதும் ஸாயீயையேõ

ஸாயீயின் காதைகளைக் கேட்க உடம்பெல்லாம் காதுகளாகுங்கள். அவருடைய அருளால்தான் கலி­யுகத்தின் மலங்களனைத்தும் நாசமாகி, இவ்வுலக வாழ்வின் பயங்களை வெல்லமுடியும்.

                               இரண்டாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
  தாங்கள் ஜப்பானில் வசிக்கும் சாயி பக்தரா?
இந்த திவ்ய சரித்திரத்தை கணினி மூலமும்.மொபைல் மூலமும் வாட்ஸ் அப்பிலும் கிண்டிலிலும் வாசித்து வரும் தங்களுக்குப் பணிவான ஒரு வேண்டுகோள். உங்கள் நண்பர்களையும் இதைத்தொடர்ந்து   வாசிக்கச்செய்யுங்கள். உங்கள் வாசிப்பின் பலன் கூடுதலாகும் பாபாவின் ஆசி  தங்களுக்கு இரட்டை மடங்காகக்கிட்டும்.எவ்வாறெனில் தாங்கமுடியாத  துன்பச்சுமையை எவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பாத  மற்றொருவருக்கு வேறு எப்படி நாம் உதவ முடியும்?}

Wednesday 6 April 2016

ஸமர்த்த ஸத்குரு ஸாயீபாபா-அத்தியாயம் - 2[இ]

[இந்த திவ்ய சரித்திரத்தை கணினி மூலமும்.மொபைல் மூலமும் வாட்ஸ் அப்பிலும் கிண்டிலிலும் வாசித்து வரும் தங்களுக்குப் பணிவான ஒரு வேண்டுகோள். உங்கள் நண்பர்களையும் இதைத்தொடர்ந்து   வாசிக்கச்செய்யுங்கள். உங்கள் வாசிப்பின் பலன் கூடுதலாகும் பாபாவின் ஆசி  தங்களுக்கு இரட்டை மடங்காகக்கிட்டும்.எவ்வாறெனில் தாங்கமுடியாத  துன்பச்சுமையை எவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பாத  மற்றொருவருக்கு வேறு எப்படி நாம் உதவ முடியும்?}

ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் 'பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்டதுஃ என்று கேள்வியுறுகிறோம். யார் இந்த ஹேமாட் பந்த்?  இக் கேள்வி கதை கேட்பவர்களின் மனத்தில் இயற்கையாக எழும். அவர்களுடைய ஆர்வத்தைத் திருப்தி செய்துகொள்ள, இப்பெயர் அவருக்கு இடப்பட்ட முகாந்திரத்தை கவனமாகக் கேட்கவேண்டும்.  ஜனனத்தி­ருந்து மரண பரியந்தம், தேஹ ஸம்பந்தமாக பதினாறு ஸம்ஸ்காரங்கள் (தூய்மை அளிக்கும் சடங்குகள்) சாஸ்திரங்களால் விதிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் நாமகரணம் பிரஸித்தியானதாகும்செவிசாய்ப்பவர்களே! இது விஷயம்பற்றிய சிறுகாதை ஒன்றைக் கவனத்துடன் கேளுங்கள். காதை மலர்கையில் 'ஹேமாட் பந்த் என்று (ஆசிரியருக்கு) நாமகரணம் ஆன விவரமும் மலரும். 

 இயற்கையாகவே குறும்பு பிடித்த இவ்வெழுத்தாளன் (தாபோல்கர்) அதிகப்பிரஸங்கி; வாய்ச்சாலகன்; அவதூறு பேசுபவன்; கே­யை நாடுபவன்; ஞானத்தைத் தொட்டும் பார்த்தவனல்லன்.  ஒரு ஸத்குருவினுடைய மேன்மையையும் முக்கியத்துவத்தையும் அறிந்தவனில்லை; கெட்டபுத்தியும் குதர்க்கமுமே உருவானவன்; தன்னுடைய மேதாவிலாஸத்தைப்பற்றிப் பெருமை கொண்டு வாதப்பிரதிவாதம் செய்வதில் ஆர்வம் மிகக் கொண்டவன். ஆயினும், விதியின் பலமான பிடி, அவனுடைய எதிர்ப்பையும் மீறி, அதிருஷ்டவசமாக ஸாயீயின் பொற்பாதங்களை தரிசனம் செய்யவைத்தது. 

காகாஸாஹேப் தீக்ஷிதர், நானாஸாஹேப் சாந்தோர்கர்
போன்ற சிறந்த பக்தர்களின் காகாஸாஹேப் என்னைத் திரும்பத் திரும்ப வற்புறுத்தியதால் சிர்டீக்குப் போவதென்று நிச்சயிக்கப்பட்டது. ஆனால் கிளம்பவேண்டிய நாளன்று இத்தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. 

என்னுடைய நெருங்கிய நண்பரொருவர், குருவின் அனுக்கிரஹம் பெற்று குருபுத்திரன் என்று பெயரும் பெற்றவர், லோனவாலாவில் குடும்பத்துடன் வசித்துவந்தபோது ஒரு விசித்திரமான இடரில் மாட்டிக்கொண்டார். 

ஆரோக்கியமான சீதோஷ்ணநிலை கொண்ட அம் மலைவாசத்தலத்தில் அவருடைய திடகாத்திரமானவனும் குணவானுமான ஒரே மகன் ஜுரத்தால் பீடிக்கப்பட்டுத் தீவிர நோயாளியாகிவிட்டான். 

மனிதர்களுக்குத் தெரிந்த ஸகல நிவாரணங்களும் கையாளப்பட்டன; தெய்வப் பிரீதியாக சாந்திகளும் செய்யப்பட்டன; குருவும் அழைக்கப்பட்டு அவனுடைய படுக்கைக்கருவில் அமரவைக்கப்பட்டார். கடைசியில் அவன் எல்லாரையும் ஏமாற்றிவிட்டான். 

அபாயமான கட்டத்தில், துக்க சம்பவத்தைத் தவிர்ப்பதற்காக குரு அவனுடைய அருகில் உட்காரவைக்கப்பட்டார். ஆனால், அனைத்தும் பயனின்றிப் போய்விட்டன. மனிதவாழ்க்கை மஹாவிசித்திரமானது. மனைவி யார்? மகன் யார்? யாருக்கு யார் சொந்தம்? அத்தனை நிகழ்ச்சிகளும் நமது கர்மாவினாலேயே (முன்ஜன்ம வினை) நிர்ணயிக்கப்படுகின்றன. 

                                                            
                                                              
                                                 ஜெர்மனியில் பிரான்க்பார்டில்
                                                    உள்ள பாபா ஆலய விக்ரகம் 
                                                         Web address for the Temple:
                                             http://shirdisaibabatemple-frankfurtgermany.com/
                                            Postal Address of the Temple:Anton-Burger-Weg 44
                                                      60599 Frankfurt / Main
                                                 Phone Number :0049-69-68600058
                                        E-mail address:shirdisaibaba.frankfurt@yahoo.de
                                                    
இந்த துர்ச்செய்தியைக் கேட்டவுடன் என் மனம் அலைமோதி சோர்வுற்றது. சிஷ்யனின் ஒரே மகனைக் காப்பாற்றமுடியாத குருவால் என்ன பிரயோஜனம்? 

கர்மாவினுடைய பலத்தையும் விதியினுடைய வ­மையையும்பற்றிய என்னுடைய சிந்தனை, ஸாயீ தரிசனம் செய்யவேண்டுமென்ற தீர்மானத்தை வலுவிழக்கச் செய்தது; சிர்டீ யாத்திரைக்குத் தடையாகவும் ஆகிவிட்டது. 

 சிர்டீக்குப் போவதால் என்ன லாபம்? என்னுடைய சிநேகிதருடைய நிலைமையைப் பாருங்கள்! குருவின் பிணைப்பால் அடையும் லாபம் இதுதானோ? கர்மவினையை குருவால் என்ன செய்துவிட முடியும்? 

தலையெழுத்துப்படி நடப்பது நடந்தே தீரும் என்றால், குரு என்று ஒருவரை எதற்காக வைத்துக்கொள்ள வேண்டும்? இவ்விதமான எண்ணங்களாலும் சிர்டீ விஜயம் ரத்து செய்யப்பட்டது. 

 நம்மிடத்தை விட்டுவிட்டு ஏன் போகவேண்டும்? குருவின் பின்னால் எதற்காக ஓடவேண்டும்? சுகமாக வாழ்ந்துகொண் டிருக்கும்போது வம்பை விலைக்கு வாங்குவதில் என்ன ஆசை? 

சுகமோ துக்கமோ, எது விதிக்கப்பட்டிருக்கிறதோ அதை அனுபவிப்போம். நடக்கப் போவதைத் தடுக்க முடியாதென்றால், குருவிடம் போவதால் பிரயோஜனம் என்ன? வேண்டும் என்று விரும்பினாலும், வேண்டாவென்று வெறுத்தாலும் ஒருவர் சேர்த்த புண்ணிய பாவங்களுக்கேற்றவாறே நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விதிவசமான நடப்புகளை யாராலும் தடுக்கமுடியாது. 

விதியே என்னைக் கடைசியில் சிர்டீக்கு இழுத்தது! 

சப்-கலெக்டராக இருந்த நானாஸாஹேப் சாந்தோர்கர், வேலைநிமித்தம் சுற்றுப்பயணமாக தாணேவி­ருந்து கிளம்பினார். வஸயீக்குப்(இன்றைய பஸ்ஸீன்) போகும் வழியில் ரயிலுக்காக தாதர் புகைவண்டி நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார். வஸயீ ரயில் வருவதற்கு ஒருமணி நேர அவகாசம் இருந்ததால் அந்த நேரத்தைப் பயனுள்ள வகையில் கழிக்கலாம் என எண்ணினார். 

இவ்வெண்ணம் தோன்றிய உடனே பாந்த்ராவரை செல்லும் ரயில் ஒன்று வந்தது. அதில் ஏறிக்கொண்டார். 
பாந்த்ரா வந்தடைந்தவுடன் அவரிடமிருந்து எனக்குச் செய்தி வந்தது. நான் போய் அவரைச் சந்தித்தேன். என்னைப் பார்த்தமாத்திரத்தில் சிர்டீ விவகாரத்தைப்பற்றிப் பேசினார். 

 ''எப்போதுதான் ஸாயீ தரிசனத்திற்குக் கிளம்பப் போகிறீர்? சிர்டீ போகும் விஷயத்தில் ஏன் இந்த அசிரத்தை? கிளம்புவதில் ஏன் இந்த இழுபறி? எடுத்த காரியத்தைச் செய்துமுடிக்கும் மனோதிடம் ஏன் இல்லை?” என்றெல்லாம் கேட்டார். 

நானாவினுடைய உற்சாகம் என்னை வெட்கித் தலை குனியச் செய்தது. ஒளிக்காமல், என்னுடைய மனத்தில் இருந்த போராட்டத்தை வெளிப்படையாக அவருக்கு விளக்கினேன். 

அதைக் கேட்ட நானா அன்புடனும் ஆத்மார்த்தமாகவும் எனக்கொரு உபதேசம் அளித்தார். அதைக் கேட்டவுடன் எனக்கு சிர்டீ செல்லவேண்டுமென்ற ஆசை (மகிழ்ச்சியுறும் வகையில்) மறுபடியும் தோன்றியது. 

 ''இப்பொழுதே கிளம்புகிறேன்ஃஃ என்று என்னிடம் வாக்கு வாங்கிக்கொண்ட பிறகுதான் நானா கிளம்பினார். நானும் அந்த முஹூர்த்தத்திலேயே கிளம்பிவிட வேண்டுமென உறுதி செய்துகொண்டு வீட்டிற்குச் சென்றேன். 
பிறகு, நான் மூட்டை கட்டிக்கொண்டு தேவையான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அன்று சாயங்காலமே சிர்டீ செல்லக் கிளம்பினேன். 

சாயங்கால மெயில் வண்டி தாதர் ரயில் வண்டி நிலையத்தில் நிற்கும் என்று நினைத்து தாதர்வரை உண்டான கட்டணத்தைச் செலுத்திப் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டேன். 

பாந்த்ராவில் நின்றுகொண்டிருந்த ரயி­ல் ஏறி உட்கார்ந்தேன். வண்டி கிளம்பி நிலையத்தை விட்டு மெதுவாக நகர்ந்துகொண் டிருக்கையில், ஒரு முஸ்லீம் சட்டென்று என்னுடைய பெட்டியில் ஏறிக்கொண்டார்.

முதல் கவளச் சோற்றிலேயே ஈ அகப்பட்டது போல, நான் தாதருக்குப் பயணச்சீட்டு வாங்கியது பிரயாணத்தைப் பொறுத்தவரை ஆரம்பத்திலேயே ஏற்பட்ட அபசகுனம் போலும்! 

என்னுடைய மூட்டை முடிச்சுகளைப் பார்த்துவிட்டு, ''எங்கே பிரயாணம்?” என்று (முஸ்லீம்) கேட்டார். ''தாதருக்குப் போய் அங்கு மன்மாட் மெயிலைப் பிடிக்கப் போகிறேன்” என்று நான் பதிலளித்தேன். 

 உடனே அவர் என்னை உஷார்ப்படுத்தினார், ''தாதரில் இறங்காதீர்; மெயில் அங்கு நிற்காது; நேராக போரீபந்தருக்குப் (இன்றைய விக்டோரியா டெர்மினஸ்) போய்விடுங்கள்”

சரியான நேரத்தில் இவ்வெச்சரிக்கை எனக்குக் கிடைத்திராவிட்டால், என்னால் தாதரில் மெயில் வண்டியைப் பிடித்திருக்கமுடியாது. ஏற்கெனவே சஞ்சலமடைந்திருந்த என் மனத்தை, எத்தனை முட்டாள்தனமான கற்பனைகள் தாக்கியிருக்கும் என்று தெரியவில்லை. 

ஆனால் அன்று எனக்கு சிர்டீக்குப் போகும் பிரயாண யோகம் இருந்தது. ஆகவே, நடுவில் ஏற்பட்ட சம்பவம் நான் எதிர்பாராமலேயே எனக்கு சாதகமான திருப்பத்தை அளித்தது. 

அடுத்த நாள் காலை ஒன்பது-பத்து மணியளவில் நான் சிர்டீ சென்றடைந்தேன். பாவுஸாஹேப் தீக்ஷிதர் எனக்காக சிர்டீக்கு வந்து, அங்கே காத்துக்கொண் டிருந்தார். 

இந்த சம்பவம் நடந்தது 1910ஆம் ஆண்டாகும். வருபவர்கள் தங்குவதற்கு ஸாடே வாடா (சத்திரம்) மட்டுமே அக்காலத்தில் சிர்டீயில் இருந்தது. 
குதிரைவண்டியி­ருந்து இறங்கியவுடன் பாபாவை தரிசனம் செய்யவேண்டுமென்ற ஆர்வம் பொங்கியது. உடனே அவருடைய பொற்பாதங்களில் விழுந்து வணங்க வேண்டுமென்ற ஆவலை அடக்கமுடியவில்லை; என் மனத்தே ஆனந்த அலைகள் ஆரவாரித்தன. 

 அந்நேரத்தில், ஸாயீயின் பரமபக்தரும் பிரபலமானவருமான தாத்யாஸாஹேப் நூல்கர் (பாவுஸாஹேப் தீக்ஷிதர் = காகாஸாஹேப் தீக்ஷிதர் = ஹரிஸீதாராம் தீக்ஷிதர் )என்பவர் மசூதியி­ருந்து அப்போதுதான் திரும்பி வந்துகொண்டிருந்தார். என்னிடம் அவர் சொன்னார், ''சீக்கிரம் தரிசனம் செய்துகொள்.-- 

 ''பாபா பக்தர்களுடன் வாடாவின் மூலைக்கு வந்துவிட்டார். முத­ல் 'தூள்பேட்’ தரிசனத்திற்குப் போ! தாமதித்தால் பாபா லெண்டிக்குக் கிளம்பிவிடுவார்.-- 

லக்ஷ்மண்ராவ் நூல்கர் - பண்டர்பூரில் சப்-ஜட்ஜாக உத்தியோகம் பார்த்தவர் - ஓய்வு பெற்றபிறகு சிர்டீயில் வாழ்ந்தார். 

சிர்டீயில் பாபா ஒரு பாழடைந்த மசூதியில்தான் வாழ்ந்தார். 

நடந்து வந்ததால் தூசி படிந்த பாதங்களைக்கூடக் கழுவாமல் (தரிசனம்).கிராமத்தின் எல்லையி­ருந்த ஓடை 

''பிறகு ஸ்நானம் செய்து கொள்ளலாம். பாபா திரும்பிவந்த பிறகு, மசூதிக்குச் சென்று ஆசுவாசமாக இன்னுமொரு தரிசனம் செய்”. 

இதைக்கேட்ட நான், பாபா இருந்த இடத்திற்கு ஓடினேன்; அவரது பாததூளிகளில் விழுந்து நமஸ்காரம் செய்தேன்; என் ஆனந்தத்திற்கு அளவேயில்லை. 

 நானாஸாஹேப் ஏற்கெனவே எனக்கு பாபாவைப்பற்றிச் சொல்­யிருந்தார்; ஆயினும் பிரத்யக்ஷமாக அதற்கு மிகையாகவே கண்டேன். இந்த தரிசனத்தால் நான் தன்யனானேன் (எல்லாச் செல்வங்களையும் படைத்தவனானேன்); கண் பெற்ற பயனைப் பெற்றேன். 

நான் பாபாவின் சுந்தரமான ரூபத்தைக் கண்டவனும் இல்லை, கேட்டவனும் இல்லை. இப்போது பார்க்கும்போது கண்கள் அமைதியுற்றன; பசி, தாஹம் அனைத்தும் மறந்து போயின; இந்திரியங்கள் அசையாது நின்றன. 

ஸாயீயின் பாதங்களைத் தொட்ட உணர்வும் அவருடைய அன்பான விசாரிப்புகளும் என்னுடைய வாழ்நாளில் நான் அனுபவித்தறியாத பூரிப்பை என் ஜீவனுக்கு அளித்தன. 

இம்முனிவரின் தொடர்பை எனக்கேற்படுத்தியவர்களுக்கு யான் என்றென்றும் தவிர்க்க முடியாதபடி கடமைப்பட்டுள்ளேன். இந்த ஸத்ஸங்கம் (நல்லோர் கூட்டுறவு) என்னுடைய உட­ன் ஒவ்வொரு அங்கத்தையும் மகிழ்ச்சியுறச் செய்துவிட்டது. 

ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுபவர்களே உற்றாரும் உறவினரும்; வேறு எந்தச் சொந்தமும் அவர்களைப்போல் ஆகாது; இதையே நான் இதயபூர்வமாக நம்புகிறேன். 

இப் பெரும் நன்றிக்கடனை நான் எப்படித் திருப்பப் போகிறேனோ, அறியேன். ஆகவே நான் அவர்களுடைய பாதங்களில் சிரம் தாழ்த்திக் கைகூப்பி, மரியாதையுடன் வணங்குகிறேன்.

எனக்கு ஸாயீ தரிசன பாக்கியம் கிடைத்துவிட்டது; என்னுடைய சந்தேகங்கள் நிவிர்த்தியாயின; ஸாயீயின் புனிதமான சங்கம் கிடைத்தது; நான் பரமானந்தம் அடைந்தேன். 

 ஸாயீ தரிசனத்தின் அற்புதம் இதுவே! அவருடைய தரிசனமே ஒழுக்கத்திலும் நடத்தையிலும் முழுமையான மாற்றத்தைக் கொண்டுவர வல்லது. மிச்சம்மீதி இருக்கும் பூர்வஜன்மவினை துடைக்கப்பட்டு, இந்திரிய சுகங்களின்மீது விருப்பமின்மை படிப்படியாகப் படரும். 
ஸாயீயினுடைய கிருபைமிகுந்த பார்வை பல ஜன்மங்களாக நான் சேமித்த பாவங்களை அழித்து, அவருடைய பாதங்கள் அழியாத ஆனந்தத்தை எனக்களிக்கும் என்னும் நம்பிக்கையை வேர்விடச் செய்தது.

 ஸாயீ ஒரு மஹான்; மஹாயோகீச்வரர்; பரமஹம்ஸர்; ஞானிகளில் சிரேஷ்டமானவர். மானஸஸரோவர் போன்ற ஸாயீயின் பொற்கமலப் பாதங்கள், காக்கையான என்னையும் அன்னபக்ஷியாக மாற்றும்; மாபெரும் பாக்கியத்தால் அவர் பாதம் கண்டேன்!

பாவங்களையும் இடர்களையும் இன்னல்களையும் நாசம் செய்யும் ஸாயீயினுடைய தரிசனமும் புனிதமான சங்கமும் என்னைத் தூய்மைப்படுத்திவிட்டன. 

 ஸாயீ மஹராஜரை நான் சந்தித்தது பல ஜன்மங்களில் சம்பாதித்த புண்ணியத்தின் பலனே! ஸாயீயின் உருவம் நம் பார்வையில் பரவியவுடனே சகல சிருஷ்டிகளும் ஸாயீ ரூபமாகத்தான் தெரிகின்றன. 

சிர்டீக்கு நான் வந்துசேர்ந்த தினத்தன்றே, பாலாஸாஹேப் பாடே(ஆரம்பகாலத்தில் சிர்டீக்குச் சென்ற பக்தர்களைக் கடுமையாக விமரிசித்த இவர், பிற்காலத்தில் தீவிர பக்தராகிவிட்டார். பாபாவுக்கு ஈமச்சடங்குகள் செய்த புண்ணியவான்.) வுக்கும் எனக்கும் 'குரு எதற்காகத் தேவை’ என்ற வாக்குவாதம் எழுந்தது. 

எதற்காக ஒருவர் சுதந்திரத்தைப் பறிகொடுத்துவிட்டு, தன்னார்வமாகவே இன்னொருவருக்குப் பணிந்து கிடப்பதை அணைத்துக்கொள்ள வேண்டும்? கடமைகளையும் அனுஷ்டானங்களையும் செய்யும் திறன் இருக்கும்போது, குரு எதற்காகத் தேவை? 

பார்க்கப்போனால், ஒவ்வொருவருக்கும் வேண்டியது சுயமுயற்சியே. சுயமுயற்சி இல்லாதவனுக்கு குரு என்ன செய்துவிடமுடியும்? விரலைக்கூட அசைக்காமல் சோம்பேறித்தனமாக முடங்கிக் கிடப்பவனுக்கு, யார்தான் என்னதான் கொடுக்கமுடியும்? 

இந்த எளிமையான தத்துவத்தை நான் முன்வைத்தேன். எதிர்க்கட்சிக்காரர்கள் இதற்கு நேர்மாறான கருத்தைத் தெரிவித்தார்கள். விடாப்பிடியாகத் தன் கட்சியே சரி என்று வாதித்தபின் இருதரப்பு வாதங்களும் சமமாயின. ஆகவே இந்தச் சர்ச்சை சூடுபிடித்தது. 

சிந்தித்துப் பார்த்தால், தேஹாபிமானமே வாதப்பிரதிவாதங்களை வளர்க்கிறது. அஹம்பாவத்தை அழித்துவிட்டால் வாதமும் அழிந்துபோகிறது! 
ஒருவர் எவ்வளவு சிறந்த வேதசாஸ்திர விற்பன்னராக இருப்பினும், குருவின் அருள் இன்றி அவருக்குக் 'காகித முக்திதான்ஃ கிடைக்கும் என்னும் வாதத்தை எதிர்க்கட்சி பலமாக எடுத்து வாதாடியது. 

விதியா? மதியா? எது வ­து? என்பதுபற்றிச் சூடாக வாக்குவாதம் கொந்தளித்தது. ''எல்லாம் விதிதான் என்று விதியின்மேல் பாரத்தைப் போட்டுவிட்டால் என்னதான் நடக்கும்?ஃஃ என்று நான் கேட்டேன். 

 என்னை எதிர்த்தவர்கள், நடப்பது நடந்தே தீரும் என்றும் விதிக்கப்பட்டதை விலக்கவே முடியாது என்றும் அஹங்காரம் பிடித்தவர்களும், மஹா கர்விகளும் அடிபட்டுவிட்டார்கள் என்றும் வாதித்தனர். 

 ''யாரால் விதிக்கெதிராக வேலை செய்யமுடியும்? நீ ஒன்று செய்கிறாய், விளைவு வேறாக இருக்கிறது. உன்னுடைய சாதுர்யத்தையெல்லாம் ஒதுக்கிவைத்துவிடு!” என்றும் வாதித்தனர். ஆனால் என்னுடைய அஹங்காரம் தோல்வியை சுலபமாக ஒப்புக்கொள்வதாக இல்லை. 

''நீங்கள் எப்படி இவ்வாறு பேசலாம்? முயற்சி திருவினையாக்குமன்றோ? சோம்பேறித்தனமாக உட்கார்ந்திருப்பவனுக்கு விதி எதைத்தான் தரமுடியும்?" என்று நான் வாதித்தேன். 

 ''உன்னுடைய முயற்சியால்தான் உன்னை உயர்த்திக்கொள்ளமுடியும் என்று வேதங்கள் கர்ஜிக்கின்றன. இதைத் தூக்கியெறிந்துவிட்டு வாழ்க்கையில் கரையேறுவது என்பது நடக்காத காரியம்.- 

 ''இவ்வுலகில் ஒருவருடைய முக்திக்கு அவரேதான் பாடுபட வேண்டும். குருவைத் தேடிக்கொண்டு எதற்காக அலையவேண்டும்? தன்னைத்தான் காத்துக் கொள்ளாதவனுக்கு குரு இருந்து மட்டும் என்ன பயன்?-- 

''தன்னையே தூய்மையாக்கிக்கொண்டு நாடுவதை அடையவல்ல, நன்மை தீமை அறியும் புத்தியைத் தூக்கியெறிந்துவிட்ட முட்டாளுக்கு குரு என்ன ஸித்தியை அளித்துவிட முடியும்?”

 இந்த வாதப்பிரதிவாதம் முடிவடையவில்லை; எந்த நற்பயனும் ஏற்படவில்லை. இந்த வாதத்தால் நான் மன அமைதியை இழந்தேன்; அதுதான் நான் கண்ட பலன்!

கடுமையான வாதப்பிரதிவாதம் செய்தபோதிலும் இருதரப்பும் சோர்வேதும் காட்டவில்லை. முக்கால் மணி நேரம் கழிந்தது. முடிவேதும் ஏற்படாமலேயே இவ்வாதம் நிறுத்தப்பட்டது. 

பிறகு, மற்ற பக்தர்களுடன் நானும் மசூதிக்குச் சென்றேன். பாபா காகா ஸாஹேபை என்ன வினவினார் என்பதைக் கேளுங்கள். 

''வாடாவில் என்ன நடந்தது? எதுபற்றிப் பெரிய வாக்குவாதம்? இந்த ஹேமாட் என்ன சொன்னார்?” கடைசிக் கேள்வியைக் கேட்டபோது என்னை உன்னிப்பாக நோக்கினார் பாபா. 

வேடிக்கையைப் பாருங்கள்! வாடாவிற்கும் மசூதிக்கும் கணிசமான தூரம் இருந்தது. அங்கு நடந்த நிகழ்ச்சி எப்படி பாபாவுக்குத் தெரிந்தது? நான் ஆச்சரியப்பட்டேன்!

பாபாவின் சொல்லம்பால் தாக்கப்பட்ட நான் நிசப்தமாகிவிட்டேன். முதற் சந்திப்பிலேயே இவ்வாறு கண்ணியமில்லாமல் நடந்துகொண்டுவிட்டோமே என்று வருந்தி, வெட்கத்தால் தலை குனிந்தேன். 


 'ஹேமாட் பந்த்ஃ என்று பாபா எனக்களித்த பெயர், அன்று காலை நடந்த சூடான வாக்குவாதத்தின் நேரடி விளைவே என்பதை நான் உணர்ந்தேன். அந் நிகழ்ச்சிதான் பாபாவுக்கு ஹேமாட் பந்தை ஞாபகப்படுத்தியிருக்க வேண்டும் என்று நான் மனத்தில் குறித்துக்கொண்டேன். 
[தொடரும்]
[இந்த திவ்ய சரித்திரத்தை கணினி மூலமும்.மொபைல் மூலமும் வாட்ஸ் அப்பிலும் கிண்டிலிலும் வாசித்து வரும் தங்களுக்குப் பணிவான ஒரு வேண்டுகோள். உங்கள் நண்பர்களையும் இதைத்தொடர்ந்து   வாசிக்கச்செய்யுங்கள். உங்கள் வாசிப்பின் பலன் கூடுதலாகும் பாபாவின் ஆசி  தங்களுக்கு இரட்டை மடங்காகக்கிட்டும்.எவ்வாறெனில் தாங்கமுடியாத  துன்பச்சுமையை எவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பாத  மற்றொருவருக்கு வேறு எப்படி நாம் உதவ முடியும்?}

Monday 4 April 2016

ஸமர்த்த ஸத்குரு ஸாயீபாபா-அத்தியாயம் - 2[ஆ]

   ஸாயீயினுடைய சரித்திரம் ஒரு மஹாஸமுத்திரம்; 
முடிவில்லாததும் அபாரமானதும் ரத்தினங்கள் நிறைந்ததுமான சுரங்கம். சிட்டுக்குருவியான நான் இந்த ஸமுத்திரத்தைக் கடக்க ­செய்ய முயற்சி செய்கிறேன். இது எவ்வாறு நடக்கும்? ஸாயீயினுடைய சரித்திரம் ஆழங்காணமுடியாதது; பூரணமாகவும் திருப்தியளிக்கும் வகையிலும் எடுத்துரைக்கமுடியாதது. முழுத்திறமையுடன் முடிந்தவரை சொல்­லி விட்டு மனத்தைச் சமாதானம் செய்துகொள்ள வேண்டியதுதான். துன்பத்தில் உழலும் மக்களுக்கு சாந்தி அளிக்கக்கூடிய, பாபாவின் அபூர்வமான கதைகள் எண்ணற்றவை. உண்மையான பக்தர்களுக்கு மேலும் மேலும் கேட்கவேண்டுமென்ற ஆர்வத்தையூட்டி, திடமான சித்தத்தை நல்குகின்றன.
                                             


                                    உலகெங்கும் பரவியுள்ள ஷீரடி சாய்பாபா 
                                               ஆலயங்களில் ஒன்றான அமெரிக்காவில் 
                                               பிளாரிடாவில்  உள்ள ஆலயத்தின் த்வாரகமயி  
 பாபா சொன்ன கதைகள் பலவிதமானவை; சில உலகியல் ஞானம் அளிப்பவை; சில அனைவருக்கும் பொதுவான அனுபவம்; சில அவருடைய புதிரான செயல்களைப் புரியவைப்பவை. தெய்வீகமானவையும் கணக்கற்றவையுமான வேதகாலத்துக் கதைகள் எவ்வாறு பிரபலமோ, அவ்வாறே பாபா சொன்ன அநேக அர்த்தபுஷ்டியுள்ளவையும் மதுரமானவையுமான கதைகள் பிரபலம். 
 மன ஒருமையுடன் கேட்கப்படும்போது பசியும் தாகமும் மறந்துபோகும்; மற்ற இன்பங்களைத் துரும்பாக்கிவிட்டு ஆழமான அமைதி செங்கோலோச்சும்.  
சிலர் பிரம்மத்தோடு ஐக்கியமாவதை நாடுவர்; சிலர் அஷ்டாங்கயோகத்தில் தேர்ச்சியைத் தேடுவர்; மேலும் சிலர் ஸமாதி நிலையின் முழுமையான சுகத்தை நாடுவர்; இந்தக் கதைகளைக் கேட்டால் அவர்களனைவருக்கும் நாடியதும் தேடியதும் கிட்டும். 
 இக் கதைகளைக் கேட்பவர்கள் கர்மபந்தத்தி­ருந்து விடுவிக்கப்படுகிறார்கள்; புத்தியும் பிரகாசம் அடைகிறது; ஏற்றத்தாழ்வு ஏதுமின்றி அனைவரும் சுகம் பெறுகிறார்கள். இக் காரணம்பற்றி, ஒன்றுசேர்ப்பதற்குகந்த இவ் வண்ணவண்ணக் கதைகளைத் தொகுத்து, மாலையொன்று கட்டவேண்டும் என்னும் அவா என் மனத்தெழுந்தது. இதுவே, சிறந்த உபாஸனை (வழிபாட்டுமுறை) என்று நான் கருதினேன். 
 இக் கதைகளின் சில வார்த்தைகள் தற்செயலாகக் காதில் விழுந்தாலே அந்த ஜீவனுடைய துரதிருஷ்டம் உடனே பின்வாங்குகிறது. இவ்வாறிருக்கையில், நம்பிக்கையுள்ள எளிய பக்தர் பயபக்தியுடன் கதை முழுவதையும் கேட்டால், நிச்சயமாக இவ்வுலகவாழ்வெனும் ஸமுத்திரத்தைக் கடந்துவிடுவார். என்னை எழுத்தாணியாக்கி, என் கையைப் பிடித்துக்கொண்டு, அக்ஷரங்களை பாபா உருவாக்குவார். பாபா வழிகாட்ட, இயந்திர கதியில் இயங்கும் கருவி மாத்திரமே யான். 
ஆண்டாண்டாக பாபாவின் லீலைகளை நேரில் கண்டதால், அன்புள்ள எளிய பக்தர்களின் நன்மை கருதி, பாபாவின் கதைகளனைத்தையும் ஒன்றுசேர்க்க வேண்டும் என்னும் அவா என் மனத்து உருண்டு விளையாடியது.  கண்களுக்கு விருந்தாகும் வகையில் பாபாவைப் பிரத்யக்ஷமாக தரிசனம் செய்ய வாய்ப்பின்றிப் போனவர்கள், அவருடைய மஹாத்மியத்தைக் காதால் கேட்டாவது புண்ணியம் சேர்க்கலாம்.  பாக்கியவானாகிய ஒருவருக்கு இக் கதைகளைப் படிக்க வேண்டுமென்ற தாகம் ஏற்பட்டால், அவ்வாறு செய்வதால் அவர் பரமானந்தத்தையும் அக அமைதியையும் பெறுவார். 
 இம் மாதிரியான எண்ணங்கள் என் மனத்தே எழுந்தன; இதை நான் மாதவராவுக்குத் தெரிவித்தேன். ஆயினும் இக் காவியத்தை என்னால் எழுதமுடியுமா என்ற சந்தேகம் என்னை உறுத்திக்கொண் டிருந்தது.  ஏனெனில், எனக்கு அப்பொழுது அறுபது வயதுக்கு மேலாகிவிட்டது. அறுபது வயதில் இந்தப் பாழாய்ப்போன புத்தி, பிரச்சினைகளையும் முட்டுக்கட்டைகளையுமே உற்பத்தி செய்ய முயல்கிறது. மேலும், தளர்ந்துபோன உடல் பிரம்மாண்டமான இம் முயற்சியைத் தடுத்தாலும் தடுக்கலாம். கடைசியில் பார்த்தால் எழுதியதெல்லாம் ஒரே பிதற்றலாக முடியலாம்.  ஆயினும், பயனற்றதும் அர்த்தமில்லாததுமான செயல்களைச் செய்துகொண்டு வாழ்வதைவிட, ஸாயீயின் ஸேவையில் ஈடுபடுவதே சிலாக்கியம் (சிறப்பு). ஆன்மீக வளர்ச்சி பெறலாம்; ஆகவே இந்த யத்தனம். 
 இரவுபகலாக நான் கண்டனுபவித்த நிகழ்ச்சிகளை விவரமாக எழுதிவைத்துவிட வேண்டுமென்ற எண்ணம் என்னுள் தோன்றியது. எழுதிவைத்ததை அசை போட்டால் சாந்தியும் விச்ராந்தியும் (இளைப்பாறுதல்) லாபமாகும்.  ஆத்மானுபவத்தின் அஸ்திவாரமும் ஆத்மதிருப்தியை அளிப்பதும் பாபா அடிக்கடி சரளமாக விடுத்ததுமான அமுதமொழிகளை நான் மற்றவர்களுக்கும் கிடைக்கவைக்க விரும்பினேன். 
 பாபா சொன்ன, ஞானத்தை அருளும் கதைகள் எத்தனையோ! பக்தி மார்க்கத்தை வழியாகக் காட்டப்பட்ட பக்தர்கள் எத்தனையோõ இவையனைத்தையும் நான் தொகுத்துவிட்டேனானால் அது ஸாயீ பாபாவின் புராணமாக அமைந்துவிடும்.  இக் கதைகளை பயபக்தியுடன் சொல்பவர்களும் கேட்பவர்களும் பூர்ணசாந்தியையும் விச்ராந்தியையும் அனுபவிப்பார்கள்.  பாபாவின் திருமுகத்தி­ருந்து வெளிப்பட்ட இக் கதைகளைக் கேட்டால், பக்தர்கள் உடல் உபாதிகளை மறந்துவிடுவார்கள்; இடைவிடாது தியானம் செய்தால், உலகியல் தளைகளி­ருந்து விடுபடுவார்கள். 
 பாபாவின் திருமுகத்தி­ருந்து வெளிப்பட்ட வார்த்தைகள் தேவாமிருதம் போன்று இனிப்பவை; கேட்டால் பரமானந்தம் விளையும்; நான் எவ்விதம் இவ்வார்த்தைகளின் மதுரத்தை (இனிமையை) விவரிப்பேன்? 
ஒருவர்வித்துவான் போலவும் பேரொழுக்கமுடையவர் போன்றும் நடிக்காமல், இக்கதைகளை யாராவது  பிரவசனம் (விரிவாக மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லுதல்) செய்தால், அவருடைய பாததூளிகளில் விழுந்து புரண்டாலே எனக்கு மோக்ஷம் நெருங்கும் என்பதை உணர்கிறேன்.  இக் கதைகள் சொல்லப்படும் அசாதாரணமான பாணியும் கற்பனை வளத்துடன் பிரயோகிக்கப்பட்ட வார்த்தைகளும் சொற்றொடர்களும் கேட்பவர்களை மெய்மறக்க வைத்து எல்லாருக்கும் மிகுந்த ஆனந்தத்தை அளிக்கும். காதுகள் இக் கதைகளைக் கேட்கவும் கண்கள் அவரை தரிசனம் செய்யவும் ஏங்குவதுபோல, மனம் தெய்வீகமான தியானத்தில் மூழ்கி, பிரக்ஞையை இழந்துவிடும். 
அன்பான குருவே என் அன்னை. அவருடைய கதைகள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு வாய்மொழிச் செய்தியாகப் பரவும் போது, நாம் பயபக்தியுடன் அவற்றைக் காதுகளால் கேட்டுச் சேமித்து வைத்துக்கொள்வோம்.  இக் கதைகளை நாம் திரும்பத் திரும்ப மனத்தில் ஓடச்செய்வோம். அன்பெனும் கயிற்றால் கட்டி எத்தனை முடியுமோ அத்தனை சேமிப்போம். பிறகு இப் புதையலைப் பரஸ்பரம் ஸமிருத்தியாகப் (தேவைக்கு மேலாகவே) பகிர்ந்துகொள்வோம். 
 இவையனைத்திலும் என்னுடையது ஒன்றுமேயில்லை; இயக்கம் முழுக்க முழுக்க ஸாயீநாதனைச் சேர்ந்ததே. கவனியுங்கள்õ அவர் எதைச் சொல்லச் சொல்­ என்னை உந்துகிறாரோ, அதையே நான் சொல்கிறேன். 
  அடடா! நான் சொல்கிறேன் என்று சொல்வது அஹங்காரம்; சூத்ரதாரி ஸாயீயே. என்னுடைய நாவை அசைப்பதே அவர்தான். நான் பேசுகிறேன் என்று சொல்லி­க்கொள்வதற்கு எனக்கென்ன தகுதி இருக்கிறது?  அஹங்காரத்தை பாபாவின் பாதகமலங்களில் ஸமர்ப்பித்துவிட்டால் அபாரமான சுகம் விளையும். அஹங்காரம் நாசமாகிவிட்டால் வாழ்க்கை ஸந்தோஷமயமாகிவிடும். 
 இந்தத் திட்டம் எனக்குத் தோன்றியபோது பாபாவிடம் இதைத் தெரிவிக்கும் நல்வாய்ப்பு எனக்குக் கிடைத்தபோதிலும், தைரியம் வரவில்லை. தற்செயலாக மசூதியில் மாதவராவைப் பார்த்தேன். உடனே அவரிடம் என்னுடைய எண்ணங்களைத் தெரிவித்தேன்.  வேறு எவரும் அந்நேரத்தில் அங்கு இல்லை. மாதவராவ் கிடைத்த வாய்ப்பைப் பற்றிக்கொண்டு பாபாவைக் கேட்டார். 
 ''பாபா! இந்த அண்ணாஸாஹேப்1 தாபோல்கர், நீங்கள் அனுமதி கொடுப்பதாக இருந்தால் உங்களுடைய வாழ்க்கைச் சரித்திரத்தைத் தம்முடைய முழுத்திறமையையும் காட்டி எழுத விரும்புவதாகச் சொல்கிறார்.-- 
 ''நான் ஒரு பிச்சைக்காரன்; வீடுவீடாக இரந்து, சேர்த்துண்ண காய்கறி பதார்த்தங்கள் கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் சோளரொட்டியைத் தின்று ஏதோ காலம் தள்ளுகிறேன்.-- 
 ''என்னைப் போன்ற பிச்சைக்காரன் ஒருவனுடைய சரித்திரத்தை ஏன் எழுத விரும்புகிறாய்? பரிஹாஸத்திற்குக் காரணம் ஆகிவிடுமே! என்று சொலலி­விடாதீர்கள். ரத்தினத்தைப் பதக்கத்தில் பொருத்துவதே சிறப்புஃஃ. (மாதவராவ்) 
 [அனுமதியை ஈந்து உதவியும் செய்தீரானால் காவியம் தன்னைத்தானே எழுதிக் கொண்டுவிடும். இல்லை, இல்லை, பாதையில் நேரும் தடைகளனைத்தையும் நீக்கி, நீர் என்னை எழுத வைப்பீர்.  ஞானிகளின் ஆசிகளே ஒரு புத்தகத்தின் மங்களகரமான ஆரம்பம்; உம்முடைய கடைக்கண் பார்வையின்றி என்னுடைய எழுதுகோல் ஓடாது. இது எனக்குள்  எண்ண ஓட்டம்) ]
 என்னுடைய எண்ண ஓட்டத்தை அறிந்துகொண்ட ஸமர்த்த ஸாயீ கருணையால் ததும்பி, ''உம்முடைய மனோரதம் நிறைவேறும்" என்று கூறினார். நான் உடனே அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கினேன். 
 வரம் தரும் கரத்தை என் சிரத்தின்மேல் வைத்து, எனக்கு உதியைப் (திருநீறு) பிரஸாதமாக அளித்தார். 
சகல தர்மங்களிலும் விற்பன்னரான இந்த ஸாயீ, பக்தர்களை உலக பந்தங்களினின்று விடுவிப்பவர் அல்லரோ!மாதவராவினுடைய வேண்டுகோளைக் கேட்ட ஸாயீ, என்மீது இரக்கம் கொண்டு, பொறுமையற்றுக் கொந்தளித்துக் கொண்டிருந்த என் மனத்தை சாந்தப்படுத்துவதற்காக எனக்கு தைரியமூட்ட ஆரம்பித்தார். 
என்னுடைய நேர்மையான நோக்கத்தை அறிந்துகொண்டார் ஸாயீ. அனுமதியைத் தெரிவிக்கும் வகையில் அவருடைய திருமுகத்தி­ருந்து வார்த்தைகள் வெளிப்பட்டன, ''அனுபவங்கள், சம்பாஷணைகள், பேச்சு, வாஸ்தவமான கதைகள் போன்றவற்றைத் தொகுத்துக்கொள்வீராக 2.-- 
 ''குறிப்பெடுத்துக்கொள்வதே நன்று; என்னுடைய முழமையான ஆதரவு அவருக்கு உண்டு. அவர் ஒரு கருவி மாத்திரமே; என்னுடைய சரித்திரத்தை நானே எழுதுவேன்.--  ''என்னுடைய சரித்திரத்தை நானே எழுதி என் பக்தனின் வேண்டுகோளை நிறைவேற்றுகிறேன். 'நான்' எனும் எண்ணத்தை வென்று, அதை என் பாதங்களில் அவர் ஸமர்ப்பிக்க வேண்டும்.--  
''இவ்வாறு வாழ்க்கை நடத்தும் ஒருவருக்கு நான் காவியம் எழுத முழு ஆதரவு நல்குவதுமட்டுமல்லாமல், அவருக்காக எல்லா வழிகளிலும் கடுமையாக உழைப்பேன்.--  
''அஹங்காரத்தையும் கர்வத்தையும் நிழலும் படாதவாறு முழுமையாக அவர் அழித்துவிட்டால், நான் அவருள் புகுந்து என்னுடைய கையாலேயே இக்காவியத்தை எழுதுவேன்.
''செவிமடுக்கவோ சிந்திக்கவோ எழுதவோ ஆரம்பிக்கும்போது, மேற்சொன்ன எண்ணம் அவரை ஆட்கொள்ளுமேயானால், அவரைக் கருவியாக மாத்திரம் வைத்துக்கொண்டு, அந்த வேலையை நானே செய்து முடிப்பேன்.-- 
 ''குறிப்புகளென்னவோ எழுதப்படவேண்டும். வீட்டிற்குள் இருந்தாலும் வெளியி­ருந்தாலும் எங்கிருந்தாலும் திரும்பத் திரும்ப என்னை நினைத்தால் நீர் சாந்தியை அனுபவிப்பீர்.-- 
 ''என் கதையைச் செவிமடுத்தலும் கீர்த்தனமாக மற்றவர்களுக்குப் பிரவசனம் செய்தலும் தியானித்தலும் என்மீது அன்பையும் பக்தியையும் பெருக்கும்; அஞ்ஞானத்தைக் கடிதே ஒழிக்கும்.-- 
 ''எங்கு பக்தி, சிரத்தை இரண்டுமே இருக்கின்றனவோ, அங்கு நான் சேவகனாக என்றும் இருக்கிறேன்; சந்தேகமே வேண்டா. இவ்விரண்டும் இல்லையெனில் நான் என்றுமே எட்டிப்பிடிக்க முடியாதவனாகவே ஆகிறேன்.--  
''ஒன்றிய மனத்துடனும் நல்லுணர்வுகளுடனும் செவிமடுக்கப்படும்போது, இக்கதைகள் பக்தியை ஊட்டும்; ஆத்மானுபவமும் ஆனந்தமும் இயல்பாகவே மலரும்; நித்திய சுகம் லாபமாகும்.-- 
''ஜீவனும் சிவனும் சுருதி சேர்ந்து, பக்தன் தன்னை அறிந்துகொள்வான். குணாதிசயங்கள் ஏதுமற்ற, புரிந்துகொள்ளமுடியாத வஸ்துவைப் புரிந்துகொள்வான். இறை அவனுக்குத் தன்னைத்தானே வெளிப்படுத்திக் காட்டும்
 ''என்னுடைய கதைகளின் பலனும் பரிசும் இவையே; வேறென்ன வேண்டும்? வேதங்களின் இறுதி இலக்கும் இதுவே; இதை அடைந்தவன் எல்லாமடைந்தவனாவான். 
''எதற்கெடுத்தாலும் வாதம் செய்பவன் அஞ்ஞானத்தையும் மாயையையும் அபரிமிதமாக வளர்ப்பான். தனக்கு ஹிதத்தையும் (நன்மையையும்) பரிசுத்தத்தையும் நல்கும் எண்ணமே தோன்றாமல், சதா துர்ப்புத்தியிலும் குதர்க்க வாதங்களிலுமே உழன்றுகொண் டிருப்பான்.--  ''இம் மனிதன் ஆத்மஞானத்திற்குப் பாத்திரமல்லன்; இவன் மாயையிலேயே மூழ்கிப் போகிறான்; இகத்திலும் சுகம் இல்லை; பரத்திலும் சுகம் இல்லை; எங்கும் எப்பொழுதும் இவனால் சுகம் அடைய முடிவதில்லை.-- 
''நம் கட்சியையே (கோட்பாடு) நிர்த்தாரணம் செய்ய வேண்டும், மாற்றான் கட்சியை நிராகரித்துவிட வேண்டும், என்னும் எண்ணங்கள் நமக்கு வேண்டா; எதிரும் புதிருமான கருத்துகளின்மேல் விவாதமும் வியாக்கியானமும் வேண்டா; எதற்காக இந்த வீண்முயற்சிகள்?ஃஃ [ 'எதிரும் புதிருமான கருத்துகளின்மேல் விவாதமும் வியாக்கியானமும் -- இச்சொற்றொடர், ஏற்கெனவே நான் வாசகர்களுக்கு அளித்திருந்த வாக்கை ஞாபகப்படுத்துகிறது. ]
முதல் அத்தியாயத்தின் முடிவில், 'ஹேமாட்ஃ என்று நான் நாமகரணம் (பெயரிடுதல்) செய்யப்பட்ட விவரத்தை எல்லாருக்கும் சொல்வதாக வாக்களித்திருந்தேன்.  கதைக்குள் கதையான இதைக் கேட்டால் உங்களுடைய ஆர்வம் திருப்தியுறும்; பொருத்தமான பெயரா அல்லது பொருத்தமில்லாததா என்றும் நீங்கள் தீர்மானிக்கலாம். உண்மையில் இதை ஞாபகப்படுத்துபவரும் ஸாயீயே.  அதற்குப் பிறகு, ஸாயீயின் பிரதானமான காதை விட்ட இடத்தி­ருந்து தொடரும். ஆகவே, இக் காதையை கவனமாகக் கேளுங்கள். [தொடரும்]
இந்த திவ்ய சரித்திரத்தை கணினி மூலமும்.மொபைல் மூலமும் வாட்ஸ் அப்பிலும் கிண்டிலிலும் வாசித்து வரும் தங்களுக்குப் பணிவான ஒரு வேண்டுகோள். உங்கள் நண்பர்களையும்  வாசிக்கச்செய்யுங்கள். உங்கள் வாசிப்பின் பலன் கூடுதலாகும் பாபாவின் ஆசி இரட்டை மடங்காகக்கிட்டும்