[இந்த திவ்ய சரித்திரத்தை கணினி மூலமும்.மொபைல் மூலமும் வாட்ஸ் அப்பிலும் கிண்டிலிலும் வாசித்து வரும் தங்களுக்குப் பணிவான ஒரு வேண்டுகோள். உங்கள் நண்பர்களையும் இதைத்தொடர்ந்து வாசிக்கச்செய்யுங்கள். உங்கள் வாசிப்பின் பலன் கூடுதலாகும் பாபாவின் ஆசி தங்களுக்கு இரட்டை மடங்காகக்கிட்டும்.எவ்வாறெனில் தாங்கமுடியாத துன்பச்சுமையை எவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பாத மற்றொருவருக்கு வேறு எப்படி நாம் உதவ முடியும்?}
ஜெர்மனியில் பிரான்க்பார்டில்
உள்ள பாபா ஆலய விக்ரகம்
Web address for the Temple:
http://shirdisaibabatemple-frankfurtgermany.com/
Postal Address of the Temple:Anton-Burger-Weg 44
60599 Frankfurt / Main
Phone Number :0049-69-68600058
E-mail address:shirdisaibaba.frankfurt@yahoo.de
ஒவ்வொரு அத்தியாயத்தின் முடிவிலும் 'பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்டதுஃ என்று கேள்வியுறுகிறோம். யார் இந்த ஹேமாட் பந்த்? இக் கேள்வி கதை கேட்பவர்களின் மனத்தில் இயற்கையாக எழும். அவர்களுடைய ஆர்வத்தைத் திருப்தி செய்துகொள்ள, இப்பெயர் அவருக்கு இடப்பட்ட முகாந்திரத்தை கவனமாகக் கேட்கவேண்டும். ஜனனத்திருந்து மரண பரியந்தம், தேஹ ஸம்பந்தமாக பதினாறு ஸம்ஸ்காரங்கள் (தூய்மை அளிக்கும் சடங்குகள்) சாஸ்திரங்களால் விதிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் நாமகரணம் பிரஸித்தியானதாகும்செவிசாய்ப்பவர்களே! இது விஷயம்பற்றிய சிறுகாதை ஒன்றைக் கவனத்துடன் கேளுங்கள். காதை மலர்கையில் 'ஹேமாட் பந்த் என்று (ஆசிரியருக்கு) நாமகரணம் ஆன விவரமும் மலரும்.
இயற்கையாகவே குறும்பு பிடித்த இவ்வெழுத்தாளன் (தாபோல்கர்) அதிகப்பிரஸங்கி; வாய்ச்சாலகன்; அவதூறு பேசுபவன்; கேயை நாடுபவன்; ஞானத்தைத் தொட்டும் பார்த்தவனல்லன். ஒரு ஸத்குருவினுடைய மேன்மையையும் முக்கியத்துவத்தையும் அறிந்தவனில்லை; கெட்டபுத்தியும் குதர்க்கமுமே உருவானவன்; தன்னுடைய மேதாவிலாஸத்தைப்பற்றிப் பெருமை கொண்டு வாதப்பிரதிவாதம் செய்வதில் ஆர்வம் மிகக் கொண்டவன். ஆயினும், விதியின் பலமான பிடி, அவனுடைய எதிர்ப்பையும் மீறி, அதிருஷ்டவசமாக ஸாயீயின் பொற்பாதங்களை தரிசனம் செய்யவைத்தது.
காகாஸாஹேப் தீக்ஷிதர், நானாஸாஹேப் சாந்தோர்கர்
போன்ற சிறந்த பக்தர்களின் காகாஸாஹேப் என்னைத் திரும்பத் திரும்ப வற்புறுத்தியதால் சிர்டீக்குப் போவதென்று நிச்சயிக்கப்பட்டது. ஆனால் கிளம்பவேண்டிய நாளன்று இத்தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
போன்ற சிறந்த பக்தர்களின் காகாஸாஹேப் என்னைத் திரும்பத் திரும்ப வற்புறுத்தியதால் சிர்டீக்குப் போவதென்று நிச்சயிக்கப்பட்டது. ஆனால் கிளம்பவேண்டிய நாளன்று இத்தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
என்னுடைய நெருங்கிய நண்பரொருவர், குருவின் அனுக்கிரஹம் பெற்று குருபுத்திரன் என்று பெயரும் பெற்றவர், லோனவாலாவில் குடும்பத்துடன் வசித்துவந்தபோது ஒரு விசித்திரமான இடரில் மாட்டிக்கொண்டார்.
ஆரோக்கியமான சீதோஷ்ணநிலை கொண்ட அம் மலைவாசத்தலத்தில் அவருடைய திடகாத்திரமானவனும் குணவானுமான ஒரே மகன் ஜுரத்தால் பீடிக்கப்பட்டுத் தீவிர நோயாளியாகிவிட்டான்.
மனிதர்களுக்குத் தெரிந்த ஸகல நிவாரணங்களும் கையாளப்பட்டன; தெய்வப் பிரீதியாக சாந்திகளும் செய்யப்பட்டன; குருவும் அழைக்கப்பட்டு அவனுடைய படுக்கைக்கருவில் அமரவைக்கப்பட்டார். கடைசியில் அவன் எல்லாரையும் ஏமாற்றிவிட்டான்.
அபாயமான கட்டத்தில், துக்க சம்பவத்தைத் தவிர்ப்பதற்காக குரு அவனுடைய அருகில் உட்காரவைக்கப்பட்டார். ஆனால், அனைத்தும் பயனின்றிப் போய்விட்டன. மனிதவாழ்க்கை மஹாவிசித்திரமானது. மனைவி யார்? மகன் யார்? யாருக்கு யார் சொந்தம்? அத்தனை நிகழ்ச்சிகளும் நமது கர்மாவினாலேயே (முன்ஜன்ம வினை) நிர்ணயிக்கப்படுகின்றன.
ஜெர்மனியில் பிரான்க்பார்டில்
உள்ள பாபா ஆலய விக்ரகம்
Web address for the Temple:
http://shirdisaibabatemple-frankfurtgermany.com/
Postal Address of the Temple:Anton-Burger-Weg 44
60599 Frankfurt / Main
Phone Number :0049-69-68600058
E-mail address:shirdisaibaba.frankfurt@yahoo.de
இந்த துர்ச்செய்தியைக் கேட்டவுடன் என் மனம் அலைமோதி சோர்வுற்றது. சிஷ்யனின் ஒரே மகனைக் காப்பாற்றமுடியாத குருவால் என்ன பிரயோஜனம்?
கர்மாவினுடைய பலத்தையும் விதியினுடைய வமையையும்பற்றிய என்னுடைய சிந்தனை, ஸாயீ தரிசனம் செய்யவேண்டுமென்ற தீர்மானத்தை வலுவிழக்கச் செய்தது; சிர்டீ யாத்திரைக்குத் தடையாகவும் ஆகிவிட்டது.
சிர்டீக்குப் போவதால் என்ன லாபம்? என்னுடைய சிநேகிதருடைய நிலைமையைப் பாருங்கள்! குருவின் பிணைப்பால் அடையும் லாபம் இதுதானோ? கர்மவினையை குருவால் என்ன செய்துவிட முடியும்?
தலையெழுத்துப்படி நடப்பது நடந்தே தீரும் என்றால், குரு என்று ஒருவரை எதற்காக வைத்துக்கொள்ள வேண்டும்? இவ்விதமான எண்ணங்களாலும் சிர்டீ விஜயம் ரத்து செய்யப்பட்டது.
நம்மிடத்தை விட்டுவிட்டு ஏன் போகவேண்டும்? குருவின் பின்னால் எதற்காக ஓடவேண்டும்? சுகமாக வாழ்ந்துகொண் டிருக்கும்போது வம்பை விலைக்கு வாங்குவதில் என்ன ஆசை?
சுகமோ துக்கமோ, எது விதிக்கப்பட்டிருக்கிறதோ அதை அனுபவிப்போம். நடக்கப் போவதைத் தடுக்க முடியாதென்றால், குருவிடம் போவதால் பிரயோஜனம் என்ன? வேண்டும் என்று விரும்பினாலும், வேண்டாவென்று வெறுத்தாலும் ஒருவர் சேர்த்த புண்ணிய பாவங்களுக்கேற்றவாறே நிகழ்ச்சிகள் நடக்கின்றன. விதிவசமான நடப்புகளை யாராலும் தடுக்கமுடியாது.
விதியே என்னைக் கடைசியில் சிர்டீக்கு இழுத்தது!
சப்-கலெக்டராக இருந்த நானாஸாஹேப் சாந்தோர்கர், வேலைநிமித்தம் சுற்றுப்பயணமாக தாணேவிருந்து கிளம்பினார். வஸயீக்குப்(இன்றைய பஸ்ஸீன்) போகும் வழியில் ரயிலுக்காக தாதர் புகைவண்டி நிலையத்தில் காத்துக் கொண்டிருந்தார். வஸயீ ரயில் வருவதற்கு ஒருமணி நேர அவகாசம் இருந்ததால் அந்த நேரத்தைப் பயனுள்ள வகையில் கழிக்கலாம் என எண்ணினார்.
இவ்வெண்ணம் தோன்றிய உடனே பாந்த்ராவரை செல்லும் ரயில் ஒன்று வந்தது. அதில் ஏறிக்கொண்டார்.
பாந்த்ரா வந்தடைந்தவுடன் அவரிடமிருந்து எனக்குச் செய்தி வந்தது. நான் போய் அவரைச் சந்தித்தேன். என்னைப் பார்த்தமாத்திரத்தில் சிர்டீ விவகாரத்தைப்பற்றிப் பேசினார்.
''எப்போதுதான் ஸாயீ தரிசனத்திற்குக் கிளம்பப் போகிறீர்? சிர்டீ போகும் விஷயத்தில் ஏன் இந்த அசிரத்தை? கிளம்புவதில் ஏன் இந்த இழுபறி? எடுத்த காரியத்தைச் செய்துமுடிக்கும் மனோதிடம் ஏன் இல்லை?” என்றெல்லாம் கேட்டார்.
நானாவினுடைய உற்சாகம் என்னை வெட்கித் தலை குனியச் செய்தது. ஒளிக்காமல், என்னுடைய மனத்தில் இருந்த போராட்டத்தை வெளிப்படையாக அவருக்கு விளக்கினேன்.
அதைக் கேட்ட நானா அன்புடனும் ஆத்மார்த்தமாகவும் எனக்கொரு உபதேசம் அளித்தார். அதைக் கேட்டவுடன் எனக்கு சிர்டீ செல்லவேண்டுமென்ற ஆசை (மகிழ்ச்சியுறும் வகையில்) மறுபடியும் தோன்றியது.
''இப்பொழுதே கிளம்புகிறேன்ஃஃ என்று என்னிடம் வாக்கு வாங்கிக்கொண்ட பிறகுதான் நானா கிளம்பினார். நானும் அந்த முஹூர்த்தத்திலேயே கிளம்பிவிட வேண்டுமென உறுதி செய்துகொண்டு வீட்டிற்குச் சென்றேன்.
பிறகு, நான் மூட்டை கட்டிக்கொண்டு தேவையான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அன்று சாயங்காலமே சிர்டீ செல்லக் கிளம்பினேன்.
சாயங்கால மெயில் வண்டி தாதர் ரயில் வண்டி நிலையத்தில் நிற்கும் என்று நினைத்து தாதர்வரை உண்டான கட்டணத்தைச் செலுத்திப் பயணச்சீட்டு வாங்கிக்கொண்டேன்.
பாந்த்ராவில் நின்றுகொண்டிருந்த ரயில் ஏறி உட்கார்ந்தேன். வண்டி கிளம்பி நிலையத்தை விட்டு மெதுவாக நகர்ந்துகொண் டிருக்கையில், ஒரு முஸ்லீம் சட்டென்று என்னுடைய பெட்டியில் ஏறிக்கொண்டார்.
முதல் கவளச் சோற்றிலேயே ஈ அகப்பட்டது போல, நான் தாதருக்குப் பயணச்சீட்டு வாங்கியது பிரயாணத்தைப் பொறுத்தவரை ஆரம்பத்திலேயே ஏற்பட்ட அபசகுனம் போலும்!
என்னுடைய மூட்டை முடிச்சுகளைப் பார்த்துவிட்டு, ''எங்கே பிரயாணம்?” என்று (முஸ்லீம்) கேட்டார். ''தாதருக்குப் போய் அங்கு மன்மாட் மெயிலைப் பிடிக்கப் போகிறேன்” என்று நான் பதிலளித்தேன்.
உடனே அவர் என்னை உஷார்ப்படுத்தினார், ''தாதரில் இறங்காதீர்; மெயில் அங்கு நிற்காது; நேராக போரீபந்தருக்குப் (இன்றைய விக்டோரியா டெர்மினஸ்) போய்விடுங்கள்”
சரியான நேரத்தில் இவ்வெச்சரிக்கை எனக்குக் கிடைத்திராவிட்டால், என்னால் தாதரில் மெயில் வண்டியைப் பிடித்திருக்கமுடியாது. ஏற்கெனவே சஞ்சலமடைந்திருந்த என் மனத்தை, எத்தனை முட்டாள்தனமான கற்பனைகள் தாக்கியிருக்கும் என்று தெரியவில்லை.
ஆனால் அன்று எனக்கு சிர்டீக்குப் போகும் பிரயாண யோகம் இருந்தது. ஆகவே, நடுவில் ஏற்பட்ட சம்பவம் நான் எதிர்பாராமலேயே எனக்கு சாதகமான திருப்பத்தை அளித்தது.
அடுத்த நாள் காலை ஒன்பது-பத்து மணியளவில் நான் சிர்டீ சென்றடைந்தேன். பாவுஸாஹேப் தீக்ஷிதர் எனக்காக சிர்டீக்கு வந்து, அங்கே காத்துக்கொண் டிருந்தார்.
இந்த சம்பவம் நடந்தது 1910ஆம் ஆண்டாகும். வருபவர்கள் தங்குவதற்கு ஸாடே வாடா (சத்திரம்) மட்டுமே அக்காலத்தில் சிர்டீயில் இருந்தது.
குதிரைவண்டியிருந்து இறங்கியவுடன் பாபாவை தரிசனம் செய்யவேண்டுமென்ற ஆர்வம் பொங்கியது. உடனே அவருடைய பொற்பாதங்களில் விழுந்து வணங்க வேண்டுமென்ற ஆவலை அடக்கமுடியவில்லை; என் மனத்தே ஆனந்த அலைகள் ஆரவாரித்தன.
அந்நேரத்தில், ஸாயீயின் பரமபக்தரும் பிரபலமானவருமான தாத்யாஸாஹேப் நூல்கர் (பாவுஸாஹேப் தீக்ஷிதர் = காகாஸாஹேப் தீக்ஷிதர் = ஹரிஸீதாராம் தீக்ஷிதர் )என்பவர் மசூதியிருந்து அப்போதுதான் திரும்பி வந்துகொண்டிருந்தார். என்னிடம் அவர் சொன்னார், ''சீக்கிரம் தரிசனம் செய்துகொள்.--
''பாபா பக்தர்களுடன் வாடாவின் மூலைக்கு வந்துவிட்டார். முதல் 'தூள்பேட்’ தரிசனத்திற்குப் போ! தாமதித்தால் பாபா லெண்டிக்குக் கிளம்பிவிடுவார்.--
லக்ஷ்மண்ராவ் நூல்கர் - பண்டர்பூரில் சப்-ஜட்ஜாக உத்தியோகம் பார்த்தவர் - ஓய்வு பெற்றபிறகு சிர்டீயில் வாழ்ந்தார்.
சிர்டீயில் பாபா ஒரு பாழடைந்த மசூதியில்தான் வாழ்ந்தார்.
நடந்து வந்ததால் தூசி படிந்த பாதங்களைக்கூடக் கழுவாமல் (தரிசனம்).கிராமத்தின் எல்லையிருந்த ஓடை
''பிறகு ஸ்நானம் செய்து கொள்ளலாம். பாபா திரும்பிவந்த பிறகு, மசூதிக்குச் சென்று ஆசுவாசமாக இன்னுமொரு தரிசனம் செய்”.
இதைக்கேட்ட நான், பாபா இருந்த இடத்திற்கு ஓடினேன்; அவரது பாததூளிகளில் விழுந்து நமஸ்காரம் செய்தேன்; என் ஆனந்தத்திற்கு அளவேயில்லை.
நானாஸாஹேப் ஏற்கெனவே எனக்கு பாபாவைப்பற்றிச் சொல்யிருந்தார்; ஆயினும் பிரத்யக்ஷமாக அதற்கு மிகையாகவே கண்டேன். இந்த தரிசனத்தால் நான் தன்யனானேன் (எல்லாச் செல்வங்களையும் படைத்தவனானேன்); கண் பெற்ற பயனைப் பெற்றேன்.
நான் பாபாவின் சுந்தரமான ரூபத்தைக் கண்டவனும் இல்லை, கேட்டவனும் இல்லை. இப்போது பார்க்கும்போது கண்கள் அமைதியுற்றன; பசி, தாஹம் அனைத்தும் மறந்து போயின; இந்திரியங்கள் அசையாது நின்றன.
ஸாயீயின் பாதங்களைத் தொட்ட உணர்வும் அவருடைய அன்பான விசாரிப்புகளும் என்னுடைய வாழ்நாளில் நான் அனுபவித்தறியாத பூரிப்பை என் ஜீவனுக்கு அளித்தன.
இம்முனிவரின் தொடர்பை எனக்கேற்படுத்தியவர்களுக்கு யான் என்றென்றும் தவிர்க்க முடியாதபடி கடமைப்பட்டுள்ளேன். இந்த ஸத்ஸங்கம் (நல்லோர் கூட்டுறவு) என்னுடைய உடன் ஒவ்வொரு அங்கத்தையும் மகிழ்ச்சியுறச் செய்துவிட்டது.
ஆன்மீக வளர்ச்சிக்கு உதவுபவர்களே உற்றாரும் உறவினரும்; வேறு எந்தச் சொந்தமும் அவர்களைப்போல் ஆகாது; இதையே நான் இதயபூர்வமாக நம்புகிறேன்.
இப் பெரும் நன்றிக்கடனை நான் எப்படித் திருப்பப் போகிறேனோ, அறியேன். ஆகவே நான் அவர்களுடைய பாதங்களில் சிரம் தாழ்த்திக் கைகூப்பி, மரியாதையுடன் வணங்குகிறேன்.
எனக்கு ஸாயீ தரிசன பாக்கியம் கிடைத்துவிட்டது; என்னுடைய சந்தேகங்கள் நிவிர்த்தியாயின; ஸாயீயின் புனிதமான சங்கம் கிடைத்தது; நான் பரமானந்தம் அடைந்தேன்.
ஸாயீ தரிசனத்தின் அற்புதம் இதுவே! அவருடைய தரிசனமே ஒழுக்கத்திலும் நடத்தையிலும் முழுமையான மாற்றத்தைக் கொண்டுவர வல்லது. மிச்சம்மீதி இருக்கும் பூர்வஜன்மவினை துடைக்கப்பட்டு, இந்திரிய சுகங்களின்மீது விருப்பமின்மை படிப்படியாகப் படரும்.
ஸாயீயினுடைய கிருபைமிகுந்த பார்வை பல ஜன்மங்களாக நான் சேமித்த பாவங்களை அழித்து, அவருடைய பாதங்கள் அழியாத ஆனந்தத்தை எனக்களிக்கும் என்னும் நம்பிக்கையை வேர்விடச் செய்தது.
ஸாயீ ஒரு மஹான்; மஹாயோகீச்வரர்; பரமஹம்ஸர்; ஞானிகளில் சிரேஷ்டமானவர். மானஸஸரோவர் போன்ற ஸாயீயின் பொற்கமலப் பாதங்கள், காக்கையான என்னையும் அன்னபக்ஷியாக மாற்றும்; மாபெரும் பாக்கியத்தால் அவர் பாதம் கண்டேன்!
பாவங்களையும் இடர்களையும் இன்னல்களையும் நாசம் செய்யும் ஸாயீயினுடைய தரிசனமும் புனிதமான சங்கமும் என்னைத் தூய்மைப்படுத்திவிட்டன.
ஸாயீ மஹராஜரை நான் சந்தித்தது பல ஜன்மங்களில் சம்பாதித்த புண்ணியத்தின் பலனே! ஸாயீயின் உருவம் நம் பார்வையில் பரவியவுடனே சகல சிருஷ்டிகளும் ஸாயீ ரூபமாகத்தான் தெரிகின்றன.
சிர்டீக்கு நான் வந்துசேர்ந்த தினத்தன்றே, பாலாஸாஹேப் பாடே(ஆரம்பகாலத்தில் சிர்டீக்குச் சென்ற பக்தர்களைக் கடுமையாக விமரிசித்த இவர், பிற்காலத்தில் தீவிர பக்தராகிவிட்டார். பாபாவுக்கு ஈமச்சடங்குகள் செய்த புண்ணியவான்.) வுக்கும் எனக்கும் 'குரு எதற்காகத் தேவை’ என்ற வாக்குவாதம் எழுந்தது.
எதற்காக ஒருவர் சுதந்திரத்தைப் பறிகொடுத்துவிட்டு, தன்னார்வமாகவே இன்னொருவருக்குப் பணிந்து கிடப்பதை அணைத்துக்கொள்ள வேண்டும்? கடமைகளையும் அனுஷ்டானங்களையும் செய்யும் திறன் இருக்கும்போது, குரு எதற்காகத் தேவை?
பார்க்கப்போனால், ஒவ்வொருவருக்கும் வேண்டியது சுயமுயற்சியே. சுயமுயற்சி இல்லாதவனுக்கு குரு என்ன செய்துவிடமுடியும்? விரலைக்கூட அசைக்காமல் சோம்பேறித்தனமாக முடங்கிக் கிடப்பவனுக்கு, யார்தான் என்னதான் கொடுக்கமுடியும்?
இந்த எளிமையான தத்துவத்தை நான் முன்வைத்தேன். எதிர்க்கட்சிக்காரர்கள் இதற்கு நேர்மாறான கருத்தைத் தெரிவித்தார்கள். விடாப்பிடியாகத் தன் கட்சியே சரி என்று வாதித்தபின் இருதரப்பு வாதங்களும் சமமாயின. ஆகவே இந்தச் சர்ச்சை சூடுபிடித்தது.
சிந்தித்துப் பார்த்தால், தேஹாபிமானமே வாதப்பிரதிவாதங்களை வளர்க்கிறது. அஹம்பாவத்தை அழித்துவிட்டால் வாதமும் அழிந்துபோகிறது!
ஒருவர் எவ்வளவு சிறந்த வேதசாஸ்திர விற்பன்னராக இருப்பினும், குருவின் அருள் இன்றி அவருக்குக் 'காகித முக்திதான்ஃ கிடைக்கும் என்னும் வாதத்தை எதிர்க்கட்சி பலமாக எடுத்து வாதாடியது.
விதியா? மதியா? எது வது? என்பதுபற்றிச் சூடாக வாக்குவாதம் கொந்தளித்தது. ''எல்லாம் விதிதான் என்று விதியின்மேல் பாரத்தைப் போட்டுவிட்டால் என்னதான் நடக்கும்?ஃஃ என்று நான் கேட்டேன்.
என்னை எதிர்த்தவர்கள், நடப்பது நடந்தே தீரும் என்றும் விதிக்கப்பட்டதை விலக்கவே முடியாது என்றும் அஹங்காரம் பிடித்தவர்களும், மஹா கர்விகளும் அடிபட்டுவிட்டார்கள் என்றும் வாதித்தனர்.
''யாரால் விதிக்கெதிராக வேலை செய்யமுடியும்? நீ ஒன்று செய்கிறாய், விளைவு வேறாக இருக்கிறது. உன்னுடைய சாதுர்யத்தையெல்லாம் ஒதுக்கிவைத்துவிடு!” என்றும் வாதித்தனர். ஆனால் என்னுடைய அஹங்காரம் தோல்வியை சுலபமாக ஒப்புக்கொள்வதாக இல்லை.
''நீங்கள் எப்படி இவ்வாறு பேசலாம்? முயற்சி திருவினையாக்குமன்றோ? சோம்பேறித்தனமாக உட்கார்ந்திருப்பவனுக்கு விதி எதைத்தான் தரமுடியும்?" என்று நான் வாதித்தேன்.
''உன்னுடைய முயற்சியால்தான் உன்னை உயர்த்திக்கொள்ளமுடியும் என்று வேதங்கள் கர்ஜிக்கின்றன. இதைத் தூக்கியெறிந்துவிட்டு வாழ்க்கையில் கரையேறுவது என்பது நடக்காத காரியம்.-
''இவ்வுலகில் ஒருவருடைய முக்திக்கு அவரேதான் பாடுபட வேண்டும். குருவைத் தேடிக்கொண்டு எதற்காக அலையவேண்டும்? தன்னைத்தான் காத்துக் கொள்ளாதவனுக்கு குரு இருந்து மட்டும் என்ன பயன்?--
''தன்னையே தூய்மையாக்கிக்கொண்டு நாடுவதை அடையவல்ல, நன்மை தீமை அறியும் புத்தியைத் தூக்கியெறிந்துவிட்ட முட்டாளுக்கு குரு என்ன ஸித்தியை அளித்துவிட முடியும்?”
இந்த வாதப்பிரதிவாதம் முடிவடையவில்லை; எந்த நற்பயனும் ஏற்படவில்லை. இந்த வாதத்தால் நான் மன அமைதியை இழந்தேன்; அதுதான் நான் கண்ட பலன்!
கடுமையான வாதப்பிரதிவாதம் செய்தபோதிலும் இருதரப்பும் சோர்வேதும் காட்டவில்லை. முக்கால் மணி நேரம் கழிந்தது. முடிவேதும் ஏற்படாமலேயே இவ்வாதம் நிறுத்தப்பட்டது.
பிறகு, மற்ற பக்தர்களுடன் நானும் மசூதிக்குச் சென்றேன். பாபா காகா ஸாஹேபை என்ன வினவினார் என்பதைக் கேளுங்கள்.
''வாடாவில் என்ன நடந்தது? எதுபற்றிப் பெரிய வாக்குவாதம்? இந்த ஹேமாட் என்ன சொன்னார்?” கடைசிக் கேள்வியைக் கேட்டபோது என்னை உன்னிப்பாக நோக்கினார் பாபா.
வேடிக்கையைப் பாருங்கள்! வாடாவிற்கும் மசூதிக்கும் கணிசமான தூரம் இருந்தது. அங்கு நடந்த நிகழ்ச்சி எப்படி பாபாவுக்குத் தெரிந்தது? நான் ஆச்சரியப்பட்டேன்!
பாபாவின் சொல்லம்பால் தாக்கப்பட்ட நான் நிசப்தமாகிவிட்டேன். முதற் சந்திப்பிலேயே இவ்வாறு கண்ணியமில்லாமல் நடந்துகொண்டுவிட்டோமே என்று வருந்தி, வெட்கத்தால் தலை குனிந்தேன்.
'ஹேமாட் பந்த்ஃ என்று பாபா எனக்களித்த பெயர், அன்று காலை நடந்த சூடான வாக்குவாதத்தின் நேரடி விளைவே என்பதை நான் உணர்ந்தேன். அந் நிகழ்ச்சிதான் பாபாவுக்கு ஹேமாட் பந்தை ஞாபகப்படுத்தியிருக்க வேண்டும் என்று நான் மனத்தில் குறித்துக்கொண்டேன்.
[தொடரும்]
[இந்த திவ்ய சரித்திரத்தை கணினி மூலமும்.மொபைல் மூலமும் வாட்ஸ் அப்பிலும் கிண்டிலிலும் வாசித்து வரும் தங்களுக்குப் பணிவான ஒரு வேண்டுகோள். உங்கள் நண்பர்களையும் இதைத்தொடர்ந்து வாசிக்கச்செய்யுங்கள். உங்கள் வாசிப்பின் பலன் கூடுதலாகும் பாபாவின் ஆசி தங்களுக்கு இரட்டை மடங்காகக்கிட்டும்.எவ்வாறெனில் தாங்கமுடியாத துன்பச்சுமையை எவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பாத மற்றொருவருக்கு வேறு எப்படி நாம் உதவ முடியும்?}


No comments:
Post a Comment