தாங்கள் ஜப்பானில் வசிக்கும் சாயி பக்தரா?
இந்த திவ்ய சரித்திரத்தை கணினி மூலமும்.மொபைல் மூலமும் வாட்ஸ் அப்பிலும் கிண்டிலிலும் வாசித்து வரும் தங்களுக்குப் பணிவான ஒரு வேண்டுகோள். உங்கள் நண்பர்களையும் இதைத்தொடர்ந்து வாசிக்கச்செய்யுங்கள். உங்கள் வாசிப்பின் பலன் கூடுதலாகும் பாபாவின் ஆசி தங்களுக்கு இரட்டை மடங்காகக்கிட்டும்.எவ்வாறெனில் தாங்கமுடியாத துன்பச்சுமையை எவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பாத மற்றொருவருக்கு வேறு எப்படி நாம் உதவ முடியும்?}

தேவகிரியைத் தலைநகராகக் கொண்ட யாதவ அரசர்களும் தௌலதாபாத்தைத் தலைநகராகக் கொண்ட ஜாதவ அரசர்களும் ஒரு வம்சத்தினரே. பதின்மூன்றாம் நூற்றாண்டில் இவர்களுடைய இராஜ்ஜியத்தின் செழிப்பு மஹாராஷ்டிரத்திற்குப் புகழ் சேர்த்தது.
இந்த வம்சத்தில் மஹாதேவர் எனப் பெயர் கொண்டவர் பராக்கிரமும் பிரக்கியாதியும் படைத்த சக்கரவர்த்தியாக விளங்கினார்.
இவருக்குப் பிறகு ராமராஜா எனப் பெயர்கொண்ட அரசர் யதுவம்சத்தின் மிகச்சிறந்த ரத்தினமாக விளங்கினார். பல நற்குணங்கள் வாய்ந்தவரும் எல்லா யோக்கியதைகளும் பெற்றவருமான ஹேமாத்ரி என்பவர் இவர்கள் இருவருக்குமே மந்திரியாகப் பதவி வகித்தார்.
ஹேமாத்ரி பிராமணர்களுக்குப் போஜனம் செய்விப்பதைப் பெரிதும் விரும்பினார். சுருதிகளையும் (வேதங்கள்) ஸ்மிருதிகளையும் (ஒழுக்க விதி நூல்கள்) நன்கு ஆராய்ந்து, வாழும் விதிமுறைகளைத் தொகுத்து, 'தர்ம சாஸ்திரம்ஃ என்னும் நூலை மராட்டியில் முதன்முதலாக எழுதியவர் இவரே.
இவர் 'சதுர்வர்க்க சிந்தாமணி' என்னும் நூலையும் எழுதினார்.(1. விரதங்களும் அனுஷ்டானமும் 2. தானதருமங்கள் 3. புனித யாத்திரைகள் 4. மோக்ஷமார்க்கம் என்று இந்நூலை நான்கு அத்தியாயங்களாகப் பிரித்து, எல்லா விவரங்களையும் அளித்திருக்கிறார். இந் நூல் மிகப் புகழ் பெற்றது. )
The Self cannot be gained by the study of Vedas, nor by intellect,nor by much learning.He,whom the Self chooses, by him It is gained.To him the Self reveals Its nature-Shirdi Sai Baba.
--------------------------------------------------------------------------------------
ஸம்ஸ்கிருத பாஷையின் ஹேமாத்ரி பந்த் என்னும் சொல் மராட்டியில் ஹேமாட் பந்த் எனத் திரிந்தது. ஹேமாத்ரி அக்காலத்தின் தலைசிறந்த ராஜதந்திரியாகவும் சாணக்கியராகவும் திகழ்ந்தார்.
அவர் ஸ்ரீவத்ஸ கோத்திரத்தில் பிறந்தவர்; நான் பாரத்வாஜ கோத்திரத்தில் பிறந்தவன். அவருக்கு முன்னோர்களில் ஐவர் மஹரிஷிகள்; எனக்கு முன்னோர்களில் மூவர் மஹரிஷிகள். அவர் யஜுர் வேதம் ஓதியவர்; நான் இருக்குவேதி. அவர் சிறந்த அறிவாளி; நானோ ஒரு மூடன்.
அவர் யஜுர் வேதத்தின் 'மாத்யாந்தின' கிளையைச் சார்ந்தவர். நான் இருக்கு வேதத்தின் 'சாகலஃ கிளையைச் சேர்ந்தவன். அவர் தர்ம சாஸ்திரத்தில் சிறந்த ஞானம் பெற்றிருந்தார்; நானோ நாகரிகமற்ற அடங்காப்பிடாரி. அவர் கல்விகேள்வி மிக்க ஞானி; நானோ ஒரு தகுதியுமற்ற அறிவி. இவ்வாறிருக்க, ஏன் எனக்கு இந்தத் தகுதியற்ற பட்டம்?
அவர் ஓர் அனுபவமிக்க அரசியல்வாதியும் கூர்ந்த மதி மிகுந்த ராஜதந்திரியும் ஆவார். நானோ மந்தபுத்தியும் சிறுமதியும் படைத்தவன். அவர் 'ராஜ்யப்ரசஸ்திஃ என்னும் ஸம்ஸ்கிருதக் காவியம் இயற்றிப் புகழ் பெற்றவர். நானோ ஸமஸ்கிருதத்தில் ஒரு செய்யுள்கூட எழுத இயலாதவன்.
அவர் ஓர் எழுத்துச் சித்தர்; நானோ படிப்பறிவில்லாதவன். அவர் தர்ம சாஸ்திரங்கள் நன்கு தெரிந்த அறிவாளி; என்னுடைய ஞானம் சொல்பமே.
'லேகனகல்பதரு' என்பது அவர் இயற்றிய பல்சுவைக் கவிதைக் கொத்து; நானோ ஓர் ஓவியும் (மராட்டிச் செய்யுள்) எழுத இயலாத பாபாவின் மட்டிப்பிள்ளைõ
சுமார் 8-ல் இருந்து 14ஆவது நூற்றாண்டு வரை மஹாராஷ்டிர தேசத்தில் கோராகும்பர், சோகாமஹர், ஸாவதாமா, நிவிருத்தி நாதர், ஞானேச்வர் மஹராஜ், நாமதேவர் போன்ற ஞானிகள் தோன்றி பக்தி மார்க்கத்தை வளர்த்தனர்.
பண்டித போபதேவ் போன்ற வித்தியாரத்தினங்கள் அலங்கரித்த ராஜசபையில் ஹேமாட் பந்த் மந்திரியாக அமர்ந்து, அறிவாளிகள் மற்றும் திறமைசாகளின் நடுவே பெயரும் புகழும் பெற்றார்.
இதன் பிறகு, முகலாயப்படை தக்காணத்தை வடதிசையிருந்து தாக்கி, எங்கும் பரவியது; அதுவே தக்காண அரசர்களின் முடிவாகியது.
இந்தப் பட்டப்பெயர் சந்தேகமில்லாமல் என்னுடைய சாமர்த்தியத்திற்காகச் சூட்டப்பட்ட புகழாரம் எனினும், நோக்கமேதுமின்றி வழங்கப்பட்டதன்று. எதற்கெடுத்தாலும் வாதத்தில் இறங்கும் என்னுடைய இயல்பின்மேல் எய்யப்பட்ட, என் அஹங்காரத்தை அழிக்கத் தொடுக்கப்பட்ட சொல்லம்பாகும்.
அறைகுறை ஞானத்தை வைத்துக்கொண்டு நான் போட்ட ராஜநடை எல்லாம் வெறும் பிதற்றலே. என்னுடைய ஞானஹீன நிலையை அறிந்துகொள்ளும் வகையில் இலேசான கண்டிப்பு என்னும் மையைத் தடவி, என் கண்களைத் திறந்துவிட்டார் பாபா.
எது எப்படியிருப்பினும், மிக முக்கியமானதும் தக்க சமயத்தில் வெளிவந்ததும் ஸாயீயினுடைய திருவாயிருந்து மலர்ந்ததுமான இந்தப் பட்டப்பெயரை நான் ஒரு பூஷணமாக (அணிகலனாக) எடுத்துக்கொண்டேன்.
இருப்பினும், எதற்கெடுத்தாலும் வாதம் செய்வதென்னும் கெட்டபழக்கம் ஒருகணம்கூட என்னைத் தொடுவதை அனுமதிக்கக்கூடாது என்னும் பாடத்தை நான் கற்றுக்கொள்ள வேண்டுமென்பதை உணர்ந்தேன். ஏனெனில், இக்குணம் பல கெடுதல்களை விளைவிக்கக்கூடியது.
என்னுடைய வாதத்திறமையைப்பற்றிய கர்வத்தை ஒழித்துவிடுவதற்காகவும், பணிவுடன் வாழவேண்டுமென்பதை இறுதிநாள்வரை மறந்துவிடக்கூடாது என்பதற்காகவுமே இப்பட்டம் எனக்கு அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.
தசரத புத்திரனும் மஹாவிஷ்ணுவின் அவதாரமானவரும் பூரணஞானியும் பிரபஞ்சத்தைக் காப்பவரும் ரிஷிகணங்களின் மனத்தில் நிலைபெற்றவருமான ஸ்ரீராமரே தம் குலகுரு வசிஷ்டரின் பாதங்களில் வணங்கினார்.
ஸ்ரீகிருஷ்ணர் பர பிரும்மத்தின் சுந்தரமான உருவமேயாவார். அவரும் ஸாந்தீபனி முனிவரை குருவாக ஏற்றுக்கொண்டு, பல சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருந்தது. குருவின் ஆசிரமத்திற்கு விறகு சேகரித்துக் கொண்டுவந்து போட நேர்ந்தது.
அவர்களோடு ஒப்பிடும்போது நான் எம்மாத்திரம்? வாதப்பிரதிவாதங்களைச் செய்வதில் என்ன பயன்? குருவின்றி ஞானமும் இல்லை, மோக்ஷமும் இல்லை. சாஸ்திரங்களில் கூறப்பட்ட இக்கருத்து என் மனத்தில் திடமாகியது.
எதற்கெடுத்தாலும் வாதம் செய்யும் இயல்போ மற்றவர்களுடன் போட்டிபோடுவதோ நற்குணம் அன்று. உள்ளார்ந்த நம்பிக்கையும் தைரியமும் பொறுமையும் இல்லையெனில், ஆன்மீக முன்னேற்றம் சிறிதும் ஏற்படாது.
பின்வந்த நாள்களில் நானே இவ்வுண்மையை அனுபவித்தேன். இவ்வாறாக, அன்புடனும் நல்லுணர்வுடனும் தூய இதயத்துடனும் அடக்கத்துடனும் யான் இந்த கௌரவமளிக்கும் பட்டப்பெயரை ஏற்றுக்கொண்டேன்.
ஜப்பான் டோக்கியோவில் உள்ள சாயீ ஆலயம்
Contact:Kiyotaka Aiuchi & Kaco Aiuchi.
"Bongaren."
Religious Organization Guru & "DivineSoul Inc."
President & CEO.
Mail: info@bonga.jp
Office Address:
〒171-0014 Tokyo, Toshima-ku, Ikebukuro,
Japan 2-68-10-302
"BONGAREN TEMPLE"
2-60-6 1F Ikebukuro,
Toshima-ku,Tokyo 〒171-0014.Japan.
Website: http://divinesoul.jp/
'என் கட்சி - எதிர்க்கட்சி' என்னும் கருத்தையே சேதம் செய்வதும் வாதப்பிரதிவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதுமானதும் எல்லாருக்கும் போதனையாக அமைவதுமான இக் காதையை இங்கு முடிப்போம்.
இக்காவியத்தின் பிரயோஜனத்தையும் யாருக்காக எழுதப்பட்டது என்பதையும் காவியத்திற்கும் பொருளுக்கும் உண்டான சம்பந்தம் பற்றியும் ஹேமாட் என்று நான் பெயரிடப்பட்டதையும் விவரித்து எழுதிவிட்டேன்.
இந்த அத்தியாயத்தின் விஸ்தாரம் போதும்!சில நாள்கள் கழிந்தபின், மற்ற விவரமான காதைகளையும் வரிசைக்கிரமப்படி ஸாயீயின் பாதங்களில் ஹேமாட் ஸமர்ப்பிப்பேன். கதை கேட்பவர்களேõ !வனத்துடன் கேளுங்கள்.
ஸாயீயே நமது சுகமும் செல்வமும்; ஸாயீயே ஸச்சிதானந்தம்; ஸாயீயே நமக்கு உலகத்துன்பங்களிருந்து விடுதலையளிப்பவர்; கடைசியில் நாம் சென்றடைவதும் ஸாயீயையேõ
ஸாயீயின் காதைகளைக் கேட்க உடம்பெல்லாம் காதுகளாகுங்கள். அவருடைய அருளால்தான் கலியுகத்தின் மலங்களனைத்தும் நாசமாகி, இவ்வுலக வாழ்வின் பயங்களை வெல்லமுடியும்.
இரண்டாவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீஸத்குரு ஸாயீநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
தாங்கள் ஜப்பானில் வசிக்கும் சாயி பக்தரா?
இந்த திவ்ய சரித்திரத்தை கணினி மூலமும்.மொபைல் மூலமும் வாட்ஸ் அப்பிலும் கிண்டிலிலும் வாசித்து வரும் தங்களுக்குப் பணிவான ஒரு வேண்டுகோள். உங்கள் நண்பர்களையும் இதைத்தொடர்ந்து வாசிக்கச்செய்யுங்கள். உங்கள் வாசிப்பின் பலன் கூடுதலாகும் பாபாவின் ஆசி தங்களுக்கு இரட்டை மடங்காகக்கிட்டும்.எவ்வாறெனில் தாங்கமுடியாத துன்பச்சுமையை எவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பாத மற்றொருவருக்கு வேறு எப்படி நாம் உதவ முடியும்?}
தாங்கள் ஜப்பானில் வசிக்கும் சாயி பக்தரா?
இந்த திவ்ய சரித்திரத்தை கணினி மூலமும்.மொபைல் மூலமும் வாட்ஸ் அப்பிலும் கிண்டிலிலும் வாசித்து வரும் தங்களுக்குப் பணிவான ஒரு வேண்டுகோள். உங்கள் நண்பர்களையும் இதைத்தொடர்ந்து வாசிக்கச்செய்யுங்கள். உங்கள் வாசிப்பின் பலன் கூடுதலாகும் பாபாவின் ஆசி தங்களுக்கு இரட்டை மடங்காகக்கிட்டும்.எவ்வாறெனில் தாங்கமுடியாத துன்பச்சுமையை எவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்பாத மற்றொருவருக்கு வேறு எப்படி நாம் உதவ முடியும்?}

No comments:
Post a Comment